பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? அதற்கான பரிகாரங்கள்
நம் அன்றாட வாழ்க்கையில் ஆன்மீகம் ஜோதிடம் பற்றி நிறைய கேள்விப்படுகிறோம். அதில் பிரம்மஹத்தி தோஷம் என்று பலர் சொல்லி கேள்விப்படுவதுண்டு.
ஆனால் சிலருக்கு அதற்கான பதில் தெரிந்தாலும் பலர் அதற்கான சரியான விடை தெரியாமல் தோஷத்தில் ஒரு தோஷம் என்று நினைத்து சாதாரணமாக எடுத்து கொள்கின்றனர்.
இப்பொழுது பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன அதற்கான பரிகாரங்கள் கோயில்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பிரம்மஹத்தி தோஷம் என்றால் கொடுமையான பாவங்கள் செய்வது. அதாவது தாய் தந்தையினர் உடன் பிறந்தவர்களை கவனிக்காமல் இருப்பது.
தன்னுடைய மனைவியை கைவிடுவது, பெற்ற பிள்ளைகளுக்கு அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் இருப்பது போன்ற விஷயங்களால் பிரம்மஹத்தி தோஷம் நமக்கு ஏற்படுகிறது.
இப்படி எதோ சூழல் மற்றும் மன குழப்பங்களால் தெரியாமல் செய்த பாவத்திற்கு விமோசனம் என்பது கண்டிப்பாக இந்த உலகில் ஆன்மீகம் நமக்கு கொடுத்திருக்கிறது.
அப்படியாக நமக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை விலக்குவதற்கு தான் திருவிடைமருதூரில் மகாலிங்க சுவாமி அருள்புரிகின்றார்.
இந்த திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலுக்கு சென்று நாம் தரிசிக்க நம்முடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்கின்றனர்.
அதாவது, இதற்கு ஒரு கதை ஒன்று இருக்கிறது. தஞ்சை ஆண்ட வரகுண பாண்டியன் ஒரு நாள் வேட்டையாட சென்றபோது வழியில் உறங்கிக் கொண்டு இருந்த அந்தனர் ஒருவர் மீது அவரின் குதிரையின் கால்கள் பட்டு இடறி விழுந்து அவர் இறந்து விடுகிறார்.
அதனால் வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விடுகிறது. அதிலிருந்து விடுபட அவர் அங்கிருந்து சுவாமியை தரிசனம் செய்கிறார்.
அதாவது மகாலிங்க சுவாமி தரிசனம் செய்ய வருகிறார், அங்கு அவர் வந்த உடன் சுவாமி அசரீரியாக அவருக்கு தோன்றி நீ மேற்கு வாயில் வழியாக செல்ல வேண்டும் என ஆணையிட, அதன்படி அந்த மன்னர் மேற்கு வாயில் வழியாக செல்ல அவருடைய பிரம்மஹத்தி தோஷம் நீக்க பெற்றார் என்பது வரலாறு.
இன்னும் பக்தர்கள் இன்று மகாலிங்க சுவாமி தரிசிக்க மேற்கு வாசல் வழியாக செல்வது ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
மேலும் சுவாமி சிலைகளை திருடுதல், அந்தணர்களுக்கு துன்பம் இழைத்தல், பெண்ணை ஏமாற்றுதல் போன்ற தவறுகளை செய்தோர் வருந்தி இத்தலத்திற்கு வந்து சுவாமியை வழிபட அவர்களது முன்வினை பயன் மற்றும் பிரம்மஹத்தி தோஷமும் நீங்குகிறது என்கின்றனர்.
மேலும் இத்தலத்தின் சுவாமியின் திருநாமம் மகாலிங்க சுவாமி அம்பாளின் திருநாமம் பிருஹத்சுந்தரகுசாம்பிகை.
சுவாமிக்கு அருகில் இருக்கும் மூகாம்பிகை சன்னதி கர்நாடகா கொல்லூருக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றதாக அமைந்திருக்கிறது
மேலும் சோழ நாட்டில் உள்ள திருவலஞ்சுழி, விநாயகர், சுவாமிமலை முருகன், சண்டிகேஸ்வரர் சூரியனார் கோயில் சூரியபகவான் முதலான நவக்கிரகங்கள், சிதம்பர நடராஜர் ,சீர்காழி பைரவர், திருவாடுதுறை நந்தி ஆகிய பரிவார தளங்களுக்கு மத்தியில் மூலமூர்த்தியாக மகாலிங்க சுவாமி அருள் பாலிக்கிறார். எனவே இது மூலலிங்க தளமும் என்று கூறுகின்றனர்.
இதை சந்திரனுக்குரிய தலமாக இருப்பதால் மனம் தொடர்பான குறைகள் யாவும் நிபர்த்தியாகும்.
சோழர்கள் பாண்டியர்கள் என பலரும் திருப்பணி இந்த கோவிலுக்கு செய்து இருக்கின்றனர்.
1200 ஆண்டுகள் பழமையான கோவிலில் உள்ள பிரகாரங்களை முறைப்படி வலம் வருபவருக்கு அசுவமேத யாகம் செய்தல் மற்றும் கைலாயத்தை வளம் வருதளுக்கு நிகரான முக்தி போன்ற கிடைக்கும் என்கின்றனர்.
ஆதலால் ,நம் மன குழப்பம் பாவங்கள் அனைத்திற்கும் விடை தரும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசித்து தோஷங்கள் நீங்கி மன தெளிவுடன் வாழ்வோம்.