புரட்டாசி மாதம் நாம் கண்டிப்பாக செய்யவேண்டிய மூன்று விஷயங்கள்

By Sakthi Raj Sep 20, 2024 07:00 AM GMT
Report

புரட்டாசி மாதம் பெருமாள் கோயில்களை நிறைய வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும்.அதில் பெருமாள் வழிபாடு தான் மிக சிறப்பாக நடைபெறும்.பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.மேலும் இந்த புரட்டாசி மாதத்தில் நாம் பக்தர்கள் கட்டாயமாக இந்த மூன்றி விஷயம் செய்ய வாழ்க்கையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை.அதை பற்றி பார்ப்போம்.

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற துன்பத்திற்கு நாமே சில சமயங்களில் காரணம் ஆகிவிடுகின்றோம்.அதாவது என்றோ ஒரு நாள் பேசிய வார்தைகள் தெரியாமல் செய்த தவறுகள் தான் கர்மாவாக நம்மை சுற்றி வந்து படம் கற்பித்து துன்பம் கொடுக்கும்.

நாம் செய்த கர்ம வினைகளை பாவங்களை போக்குவதற்கு சாஸ்திர ரீதியாக நமக்கு நிறைய வழிபாட்டு முறைகள் இருக்கிறது.அதற்காக தெரிந்தே தவறுகள் செய்து விட்டு கடவுளிடம் மன்னிப்பு கேட்க கடவுள் நிச்சயம் பாவ விமோச்சனம் தரமாட்டார்.அந்த வகையில் மனிதனாக பிறந்த தெரியாமல் செய்த பாவத்தை போக்க ஒரு சுலபமான புரட்டாசி மாதம் செய்யப்படும் பெருமாள் வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்ளவோம்.

புரட்டாசி மாதம் நாம் கண்டிப்பாக செய்யவேண்டிய மூன்று விஷயங்கள் | Three Things We Must Do In Purattasi Month

பெருமாளை மனதில் நினைத்து நமோ நாராயணாய என்று சொன்னாலே புண்ணியம் பிறக்கும்.இருந்தாலும் பெருமாளை கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய கூடுதல் பலன்கள் கிடைக்கும். அப்படியாக பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்குவதற்கு என்று சாஸ்திரத்தில் சில வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைப்படி நம் பெருமாள் கோவிலுக்கு சென்றால் இந்த மூன்று விஷயங்களை கட்டாயம் செய்தே ஆகவேண்டும்.

கோயிலுக்கு சென்றால் தீர்த்தம் என்று வழங்கக்கூடிய ஒரே கோயில் பெருமாள் கோயில் தான்.பெருமாள் கோவில் தீர்த்தம் நம்முடைய உடலில் கண்ணுக்கு தெரியாத எந்த பிணி இருந்தாலும் அதை தீர்க்கக்கூடிய சக்தி, இந்த பெருமாள் கோவில் தீர்த்தத்திற்கு உண்டு என்றே சொல்லலாம். தீர்த்த ரூபத்தில் நம் கையில் வருவது அந்த பெருமாள் தான். ஆக பெருமாள் கோவிலுக்கு சென்றால் கட்டாயமாக தீர்த்தத்தை வாங்கி பருகிக் கொள்ளுங்கள்.

புரட்டாசி வெள்ளிக்கிழமை என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது?

புரட்டாசி வெள்ளிக்கிழமை என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது?


இரண்டாவதாக துளசி. பெருமாளும் தாயாரும் வாசம் செய்யும் துளசியை நம் கையில் வாங்கி நம் கண்களில் ஒற்றிக் கொண்டாலே போதும் பெருமாளின் அன்பினை நாம் முழுமையாகப் பெற்று விடலாம். பெருமாளின் அன்பை பரிபூரணமாக பெற வேண்டும் என்றால் பெருமாள் கோவில் துளசியை கட்டாயம் நம் கைகளில் வாங்கி, நம் வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி மாதம் நாம் கண்டிப்பாக செய்யவேண்டிய மூன்று விஷயங்கள் | Three Things We Must Do In Purattasi Month

இறுதியாக சடாரி. இதுதான் முக்கியமான ஒன்று.நம்முடைய தலையெழுத்தை மாற்றக்கூடியது. அந்த பிரம்மா நம்முடைய தலை எழுத்தை எழுதி வைத்திருந்தாலும் சரி, அதை நல்ல நிலைமைக்கு கொண்டு வரக்கூடிய சக்தி இந்த சடாரிக்கு உண்டு.

சடாரிக்கு 'பாதுகை" என்ற மற்றொரு பெயரும் இருக்கின்றது. 'பா" என்றால் பாவத்தை விளக்குவது என்று பொருள். 'து" என்றால் துன்பங்கள் விலகும் என்பதும் பொருள். 'கை" என்றால் அந்த பெருமாளே நம்முடைய வாழ்க்கையை கை கொடுத்து மேலே தூக்கி விடுவார் என்பது பொருளாக சொல்லப்பட்டுள்ளது.

தர்மத்தின் தலைவன் ஆன பெருமாளை இந்த புரட்டாசி மாதத்தில் வழிபாடு செய்ய நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் எல்லாம் விலகும்.

மேலும் முடிந்த வரை புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை தரிசித்து வர வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.அவரின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US