இறைவழிபாட்டின் போது கடைபிடிக்க வேண்டிய 3 விஷயங்கள்
இறைநாட்டம் என்பது அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வருவதில்லை.இறைவழிபாட்டில் ஈடுபட நிச்சயம் இறைவனின் பரிபூர்ண அருள் இருக்க வேண்டும்.அப்பொழுது தான் நாம் வீட்டில் கூட விளக்கு ஏற்றி பூஜைகள் செய்து வழிபாடு செய்ய முடியும்.
மேலும்,இறைவனின் திருநாமம் மற்றும் மந்திரங்கள் சொல்லவேண்டும் என்றால் எளிதில் யாருக்கும் அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை.இதற்கு காரணம் கர்ம வினைகள்.அந்த கர்ம வினைகளை நாம் இறைவழிபட்டால் மட்டுமே சரி செய்ய முடியும்.
அப்படியாக இறைவனின் பரிபூர்ண அருள் கிடைக்க இறைவழிபாட்டின் பொழுது நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று விஷயங்களை பற்றி பார்ப்போம். தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம்.இந்த மாதத்தில் ஆண்டாள் பாவை நோன்பு மேற்கொன்டு பெருமாளை அடைந்தார்.
மேலும் ஆண்டாள் அருளிச்செய்த பாசுரத்தில் இறைவனை எவ்வாறு வாழிபாடு செய்யவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்கள் இறைவழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.
சிலர் இறைவழிபாடு செய்யாமல் உணவு உண்ணமாட்டார்கள்.இவ்வாறு இறைவன் மீது அதீத பக்தியும் அன்பும் வைத்திருந்தார்கள்.அப்படியாக நாம் இறைவழிபாடு செய்யும் பொழுது திரிகரன சுத்தத்தோடு பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
கை , வாய் , மனது இந்த 3 விஷயங்களை ஒருநிலைப்படுத்துவதே பூஜைக்கான முக்கிய விதியாகும். நாம் எப்பொழுதும் மனதை ஒருநிலை படுத்தி வாழவேண்டும்.இவ்வாறு வாழ்வது நமக்கு வெற்றியை தரும்.பிறகு நம் கைகளால் மாலைகள் தொடுத்து இறைவனுக்கு சாற்றி பூக்கள் கொண்டு மந்திரங்கள் சொல்லி அர்ச்சனை செய்யவேண்டும்.
இந்த மூன்று விஷயத்தையும் ஒரே நேரத்தில் செய்து வழிபாட்டை செய்வதுதான் திரிகரன சுத்தி என்று சொல்லப்பட்டுள்ளது.இவ்வாறு மனதை ஒருநிலை படுத்தி வழிபாடு செய்யும் பொழுது தான் நாம் இறைவனை அடையமுடியும்.
ஆக கோயிலுக்கு செல்லும் பொழுதும் வீட்டில் பூஜை செய்யும் பொழுதும் மன பதட்டம் இல்லாமல் அவசரமாக பூஜைகள் செய்யாமல் நிதானமாக நம்முடைய நேரத்தை இறைவனுக்கு செலவிட அவன் அருள் நிச்சயம் நமக்கு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |