மறந்தும் இந்த 3 பொருட்களை தானம் செய்யாதீர்கள்
பூமியில் பிறந்த எல்லோருக்கும் ஒரே போல் வாழ்க்கை அமைவது இல்லை.இருந்தாலும் சக மனிதன் துன்பத்தால் அவதி பட்டால் காட்டாயம் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.அப்படியாக நம்முடைய சாஸ்திரத்தில் என்னதான் நமக்கு உதவும் மனப்பான்மை இருந்தாலும் ஒரு சில பொருட்களை மறந்தும் தானம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள்.
அவ்வாறு செய்யும் பொழுது நமக்கு நிதி நெருக்கடிகள்,குடும்பத்தில் சண்டைகள்,மகிழ்ச்சியின்மை உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.அதை பற்றி பார்ப்போம்.
காலம் காலமாக நம் முன்னோர்கள் சூரியன் மறைவிற்கு பிறகு வெள்ளை நிற பொருட்களை தானம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள்.அதாவது உப்பு, பால், தயிர் போன்ற வெள்ளை நிற பொருட்களை யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது என்று சொல்லகிறார்கள்.
அதே போல்,நம்முடைய வீட்டில் சமையலறையில் உபயோகிக்கும் பொருட்களை ஒரு போதும் யாருக்கும் கடன் கொடுக்காது.காரணம்,ஒரு வீட்டில் பூஜை அறைக்கு நிகர் சமையலறை அதில் அன்னபூரணி வாசம் செய்கிறாள்.
அதை நாம் பிறருக்கு கடன் கொடுக்கும் பொழுது நம்முடைய வீட்டில் நிதி நெருக்கடிகள் உண்டாகலாம். அதிலும் குறிப்பாக,அரிசி பானை, சாதம் வைக்கும் கரண்டி, தட்டு, அரிசி அளக்கும் அளவை போன்றவற்றை யாருக்கும் கடன் கொடுக்க கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
இவ்வாறு கொடுக்கும் பொழுது நம்முடைய வீட்டில் வறுமை உண்டாகலாம். ஒரு சிறு சிறு விஷயங்களில் பல மாற்றங்களையும்,எதிர்மறை வினைகளும் சந்திக்கக்கூடும்.ஆக நாம் அறியாமல் செய்யும் சில விஷயங்களை மாற்றி கொண்டால் போதும் வீட்டில் மஹாலக்ஷ்மி அருள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |