திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

By Yashini Mar 12, 2025 09:44 AM GMT
Report

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

பக்தர்கள் திருவண்ணாமலையில் உள்ள மலையையே சிவனாக வழிபடுகின்றனர்.

இந்த மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். 

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் | Time To Visit In Pournami Girivalam Tiruvannamalai

கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்நிலையில் மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதன்படி, பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) காலை 11.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 14ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மதியம் 12.57 மணிக்கு நிறைவடைகிறது என்று கோவில் நிர்வாகத்தின் தெரிவித்துள்ளது.       

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.           


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US