18 வருடங்களுக்கு பிறகு உருவாகும் திரிகிரஹி யோகம்-மிக பெரிய அதிர்ஷ்டம் சந்திக்க போகும் 3 ராசிகள்

By Sakthi Raj Feb 26, 2025 11:00 AM GMT
Report

ஜோதிடம் பொறுத்த வரையில் கிரகங்களின் மாற்றம் ஒவ்வொரு ராசியினருக்கு மிக பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.இவற்றில், ராகு கிரகத்தின் மாற்றம் மிக பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.காரணம் ஒரு மாதத்தில் ஒரு ராசியை மாற்றி, முழு ராசிச் சுற்றி முடிக்க 18 ஆண்டுகள் ஆகும்.

தற்போது ராகு கிரகம் மீன ராசியில் உள்ளது. இதற்கிடையில், புதன் கிரகம் பிப்ரவரி 27 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைகிறது. மேலும் சூரியன் மார்ச் 14 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைகிறது.இந்த மூன்று கிரகங்களும் மீன ராசியில் ஒன்று சேரும்போது திரிகிரஹி யோகம் ஏற்படும்.

இது சரியாக ஹோலி பண்டிகை நாளில் நிகழ்கிறது.இந்த யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் வாழ்க்கையில் பெரிய மாற்றமும் வெற்றியும் சந்திப்பார்கள்.அவர்கள் எந்த ராசி என்று பார்ப்போம்.

மகாசிவராத்திரியில் 12 ராசிகளும் சிவபெருமானுக்கு செய்யவேண்டிய அபிஷேகம் பொருட்கள்

மகாசிவராத்திரியில் 12 ராசிகளும் சிவபெருமானுக்கு செய்யவேண்டிய அபிஷேகம் பொருட்கள்

சிம்மம்:

இந்த நேரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக அமையும்.நீண்ட காலமாக கஷ்டத்தை சந்தித்து வந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலம் மிகவும் பொற்காலம் ஆகும்.வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.பல ஆண்டுகள் உடல் உபாதைகள் சந்தித்த சிம்ம ராசியினருக்கு உடல் உபாதைகள் குணமாகும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக அமையும்.இந்த நேரத்தில் மீன ராசியினருக்கு எதிர்பாரா அதிர்ஷடம் காத்திருக்கிறது.சிலருக்கு நிலம் விற்கும் வாங்கும் யோகம் உண்டாகும்.குடும்பத்துடன் நல்ல உறவு மேம்படும்.உங்கள் உழைப்பால் நல்ல மாற்றம் சந்திப்பீர்கள்.பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் முக்கிய காலமாகும்.இந்த காலகட்டத்தில் இவர்கள் வாழ்க்கையில் நிறைய சந்தோஷங்களை சந்திப்பார்கள்.பணியிடத்தில் உங்களுக்கு மதிப்பு உயரும்.ஒரு சிலருக்கு நீண்ட நாள் சந்தித்த குடும்ப பிரச்சன்னை முடிவிற்கு வரும்.மேலும் உங்கள் வருமானத்தில் அதிகரிப்பைக் காண்பீர்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US