உங்கள் பக்கம் நியாயம் ஜெயிக்க வனவாராஹியை வழிபாடு செய்யுங்கள்
ஒருவருடைய வாழ்வில் மூன்றாம் நபரால் தேவை இல்லாத பிரச்சனைகள் தொந்தரவுகள் ஏற்பட்டாலும் அல்லது உங்கள் பக்கம் நியாயம் இருந்தும் அதற்கான தீர்வு கிடைக்காமல் துன்பப்பட்டாலோ நீங்கள் மனதார சரண் அடையவேண்டிய தெய்வம் வாராஹி அம்மன் தான்.
அப்படியாக திருநெல்வேலி மாவட்டம் மேலக்குளம் கிராமத்தில் ராஜஸ்ரீ அஷ்டபுஜ தவயோக வனவாராஹி அம்மன் திருக்கோயில் இருக்கிறது.தங்கள் வாழ்வில் பொருளாதார கஷ்டங்கள் மற்றும் வழக்குகளில் சமரசம் ஆக இங்கு வழிபாடு செய்ய நிச்சயம் அவர்களுக்கான பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதிலும் குறிப்பாக இந்த கோயிலில் ஆடி மாதம் மற்றும் தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவதாக சொல்கிறார்கள். மேலும்,இந்த கோயிலில் முக்கிய பரிகாரமாக பெண்கள் அம்மியில் மஞ்சள் அரைத்து அதை அம்மன் சன்னிதியில் வைத்து வழிபடுவது தான்.
அவ்வாறு அரைத்து வைக்கும் மஞ்சளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.இதற்கு முதலில் மஞ்சளை பன்னீரில் ஊறவைத்து பிறகு அதை அம்மி கல்லில் வைத்து அறைத்து அம்மன் சன்னிதியில் கொடுக்கின்றனர்.
பிறகு சப்த கன்னியர் வழிபாடும் இருக்கிறது.இந்கு வாராஹி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி தேய்பிறை பஞ்சமி பௌர்ணமி போன்ற நாளில் முக்கிய விசேஷங்கள் நடக்கிறது.ஆக உங்கள் வாழ்க்கையில் தீர்க்கமுடியாத பிரச்சன்னை என்று துன்பப்படும் பொழுது இங்கு வந்து வாராஹி அம்மனை வழிபாடு செய்ய நிச்சயம் உங்களுக்கான நல்ல தீர்வு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |