திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்ய ஒரு வாய்ப்பு
உலகில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை கோயிலுக்கு தினசரி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ஸ்வாமியை தரிசனம் செய்கின்றனர்.
அப்படியாக அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.இலவச தரிசனத்தில் நின்று தரிசனம் செய்தால் ஸ்வாமியை தரிசிக்க ஒரு நாள் கூட ஆகிவிடும்.
இதனால் விடுமுறை நேரங்களில் பலரும் ஸ்வாமியை தரிசிப்பது தவிர்த்து விடுவார்கள்.
இதற்கிடையில் மாற்றுத்திறனாளிகளும், மூத்த குடிமக்களும் இலவசமாக அரை மணி நேரத்தில் எளிதாக ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது இவர்களுக்காகவே திருப்பதி தேவஸ்தானம் நாளொன்றுக்கு ஒரு முறை சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்துள்ளது.
வாரந்தோறும் திங்கள் முதல் சனி வரை தினமும் பிற்பகல் 3 மணி முதல் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் சிறப்பாக முதியவர்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பார்க்கிங் ஏரியாவில் இருந்து திருமலை கோவிலுக்கு வெளியே உள்ள வாயிலில் இருக்கும் கவுண்டர் வரை ஒரு சிறப்பு மின்சார கார் வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டுருக்கிறது.
மூலம் மாற்றுத்திறனாளிகளும், மூத்த குடிமக்களும் இனி எளிமையாக அரை மணி நேரத்தில் எந்த சிரமமும் இன்றி தரிசனம் செய்யலாம்.
இதே போன்று ரூ. 20 செலுத்தி இரண்டு திருப்பதி லட்டுகளையும் எடுத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வசதியை பெற நினைப்பவர்கள் 65 வயதை நிறைவு செய்திருப்பது கட்டாயமாகும்.
மேலும் மாற்றுத்திறனாளிகள், இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய், பக்கவாதம், ஆஸ்துமா உள்ளவர்களும் இந்த சலுகைகளை பெற முடியும்.
நடக்க முடியாத வயதானவர்களை அழைத்து செல்ல அவர்களுடன் ஒருவர் மட்டும் இந்த சலுகையை பெற்று சாமி தரிசனம் செய்ய முடியும்.
இதனால் அவர்களும் எளிமையாக தரிசனம் செய்ய முடியும்.இந்த சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டையும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயமாக உடல் ஊனமுற்றோர் சான்றிதழும், ஆதார் அட்டையும் எடுத்து வர வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆதார் அட்டை மற்றும் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர் அல்லது நிபுணர் வழங்கிய மருத்துவச் சான்றிதழுடன் வர வேண்டும்.
மேலும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்கான டிக்கெட்டை திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
அதற்கு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. டிக்கெட்டுகளை இலவசமாக பதிவு செய்யலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |