திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
திருவண்ணாமலையில் வீற்றி இருக்கும் அப்பன் அருணாச்சலேஸ்வர் தரிசிக்க உலகம் எங்கும் பக்தர்கள் வருவார்கள் .மேலும் கோயிலில் கிரிவலம் செல்ல நாம பாவங்களை கரையும் என்பர்.
அப்படியாக திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி நேரம் வருகிற 22-ந் தேதி புதன்கிழமை இரவு 7.16 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, 23-ந் தேதி வியாழக்கிழமை இரவு 7.51 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம்.
சமீபகாலமாக பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது.
அதோடு, தற்போது கோடை விடுமுறை என்பதால், வரும் பவுர்ணமியன்று கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கம் போல சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து
திருவண்ணாமலைக்கு பவுர்ணமி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |