திருக்கார்த்திகை 2024:திருவண்ணாமலை மகாதீபம் நேரலை ஒளிபரப்பு
சிவபக்தர்கள் காத்திருப்பது திருக்கார்த்திகை திருவண்ணாமலை தீபம் தான்.அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி.அப்படியாக திருவண்ணாமலையில் மலையாக சிவபெருமான் வீற்றியிருக்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருக்கார்த்திகை நாள் அன்று திருவண்ணாமலையில் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.இதை காண பல லட்சபக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வருகைபுரிவர்.மேலும்,மலை உச்சியில் மகாதீபம் ஏற்றிய பிறகு தான் நாம் வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வோம்.
இந்த நாளில் அண்ணாமலையாரை மனதார நினைத்து வீடுகளில் தீபம் ஏற்ற நம்முடைய பாவங்கள் விலகி புண்ணியம் சேரும்.மேலும் வீடுகளில் கட்டாயம் 27 விளக்குகள் குறையாமல் விளக்கு ஏற்ற வேண்டும்.
மேலும் திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே அங்கு நடக்கும் நிகழ்வுகளை கண்டுகளிக்க ஐபிசி பக்தியில் உங்களுக்காக நேரலை காட்சி ஒளிபரப்பப்படுகிறது.