நாளைய ராசி பலன் (27-04-2026)
மேஷம்:
எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுங்கள். உங்கள் வீடுகளுக்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு பொருளாதார ரீதியாக சில சிக்கல் வரலாம்.
ரிஷபம்:
திடீர் வெளிநாடு செல்லும் யோகம் வரலாம். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். உடன் பிறந்தவர்களிடம் வீண் வாக்கு வாதம் தவிர்த்தால் நன்மை உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும்.
மிதுனம்:
இன்று எதிர்கால வாழ்க்கை பற்றிய பயமும் கவலையும் வரலாம். குடும்பத்தினர் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம்.
கடகம்:
தொழில் ரீதியாக சில எதிரிகள் வரலாம். பிள்ளைகளுக்கு பிடித்த பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
சிம்மம்:
அரசியலில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொந்தங்கள் மத்தியில் இருந்து வந்த மன கசப்புகள் விலகும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டிய நாள்.
கன்னி:
காதல் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்களின் வழிநடத்துதலால் முக்கியமான காரியத்தை செய்து முடிப்பீர்கள். தாய் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும்.
துலாம்:
இன்று தேவை இல்லாத கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களை பற்றி சிலர் புரிந்து நடந்துகொள்ளாமல் இருக்கலாம். வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்யபவர்களுக்கு பொற்காலம்.
விருச்சிகம் :
குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனை வந்து செல்லும். தாயிடம் தேவை இல்லாத கருத்து வேறுபாடுகள் வைத்துக் கொள்ளாதீர்கள். சிலருக்கு சொந்த ஊர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும்.
தனுசு:
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உணவு வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சொந்தங்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நடப்பீர்கள்.
மகரம்:
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வருமானத்தை உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
கும்பம்:
உங்கள் குடும்ப விஷயங்களை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மேடை பேச்சாளருக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்க உள்ளது. பிரிந்த சொந்தம் ஒன்று சேருவார்கள்.
மீனம்:
உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வருமானம் உயர்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். சொந்தங்களிடம் நீங்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |