நாளைய ராசி பலன்(13-12-2025)
மேஷம்:
வேலை செய்யும் இடத்தில் கட்டயமாக நீங்கள் அமைதி காக்க வேண்டும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். கலை துறையில் இருப்பவர்களுக்கு இனிமையான நாள்.
ரிஷபம்:
கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். வேற்று மொழி பேசுபவர்களின் ஆதரவு கிடைக்கும். வண்டி வாகனத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
மிதுனம்:
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வங்கி தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும். முக்கியமான நபர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும்.
கடகம்:
உங்கள் சிந்தனையில் நல்ல தெளிவும் மாற்றமும் உண்டாகும். பொருளாதார பிரச்சனையில் இருப்பவர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். சொந்தங்கள் மத்தியில் நல்ல பெயரை கிடைக்கும்.
சிம்மம்:
வியாபாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். வேலையில் உங்களுக்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். திடீர் மருத்துவ செலவுகளை சிலர் சந்திக்க நேரலாம். மதியம் மேல் நன்மை உண்டாகும்.
கன்னி:
உங்கள் குடும்பத்தில் சந்தித்த மிக பெரிய பிரச்சனை நல்ல முடிவை பெரும். தந்தை ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்துவீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும் நாள்.
துலாம்:
உங்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்ளும் நாள். சிலர் சமூக பணிகளில் பங்கு கொள்வார்கள். குடும்பத்தில் உங்களுக்கான நற்பெயர் உயரும். அலுவலகத்தில் உங்கள் மேல் நல்ல எண்ணம் தோன்றும்.
விருச்சிகம்:
தேவை இல்லாமல் பெரியவர்களிடம் வாக்கு வாதம் செய்யாதீர்கள். நண்பர்களுடன் நீங்கள் பொழுது போக்கு நேரத்தை செலவு செய்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் செல்ல நேரலாம்.
தனுசு:
இன்று சிலருக்கு வீண் அலைச்சல் உண்டாகும். உங்கள் வீடுகளில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை நல்ல முறையில் முடியும். பெரியவர்களின் ஆசீர்வாதம் பெரும் நாள்.
மகரம்:
பிடிவாத குணத்தை குறைத்து கொள்ளுங்கள். பிள்ளைகள் நலனில் முழு அக்கறை செலுத்த வேண்டிய நாள். எதிர்கால வாழ்க்கைக்காக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நன்மையான நாள்.
கும்பம்:
உங்கள் நீண்ட நாள் கனவு நினைவாகும் நாள். சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். பிரிந்து சென்றவர்கள் உங்களை தேடி மீண்டும் பேசுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
மீனம்:
குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். வெளியூர் சென்று கோவில் வழிபாடு செய்யும் யோகம் கிடைக்கும். மதியம் மேல் உங்கள் வீடுகளில் எதிர்பார்த்த காரியம் நடைபெறும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |