நாளைய ராசி பலன்(24-12-2025)
மேஷம்:
இன்று பொது காரியங்களில் பங்கு கொள்வீர்கள். குடும்பத்தில் பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மரியாதையும் பாராட்டுகளும் கிடைக்கும்.
ரிஷபம்:
இன்று உங்களுக்கு எதிர்பாராத விதமாக உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகள் வழியே உங்களுக்கு ஒரு நல்ல பெயர் கிடைக்கும். விலகி சென்றவர்கள் மீண்டும் தொடர்பு கொள்வார்கள்.
மிதுனம்:
நினைத்த காரியம் நினைத்த நேரத்தில் நடக்கும். வழக்கு விஷயங்களில் மட்டும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கக்கூடிய நாள்.
கடகம்:
இன்று முக்கிய முடிவுகளை மிகவும் பொறுமையாக ஆலோசனை செய்து எடுப்பது நல்லது. குடும்பத்துடன் வீண் வாக்குவாதத்தில் கலந்து கொள்ளாதீர்கள். மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும் நாள்.
சிம்மம்:
விரும்பிய காரியத்தை செய்வதில் சில தடைகள் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பணவரவு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
கன்னி:
குடும்பத்தில் இன்று தந்திரமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வேலை இடங்களில் சொன்ன சொல்லை காப்பாற்றக் கூடிய நாள். வாழ்க்கையில் திடீர் திருப்பம் உண்டாகும்.
துலாம்:
உங்கள் வருமானத்தை உயர்த்துவதற்கான எல்லா வேலைகளையும் செய்வீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவதை பற்றி யோசிப்பீர்கள்.
விருச்சிகம்:
குடும்பத்தில் முக்கிய சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் மிகவும் கவனமாக பேச வேண்டும். முடிந்து வரை இரவு நேரங்களில் பயணம் செல்வதை தவிர்த்து விடுங்கள்.
தனுசு:
உங்கள் மனதில் புதிய சிந்தனைகள் பிறக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல ஆதாயம் உண்டாகும். சுப காரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். வண்டி வாகனம் மாற்றும் யோகம் உண்டாகும்.
மகரம்:
தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரலாம். நன்மையான நாள்.
கும்பம்:
இன்று எதிலும் ஒரு பதட்டமான நிலையை சந்திப்பீர்கள். சொத்துக்கள் வாங்குவதிலும் இருப்பதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நன்மையான நாள்.
மீனம்:
இன்று கூடுதல் அலைச்சலால் உடலில் சோர்வு உண்டாகலாம். முடிந்தவரை தேவையில்லாத பயணங்களை தவிர்த்து விடுங்கள். எதிலும் மிகவும் பொறுமையாக செயல்பட்டாலே வெற்றி அடைய முடியும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |