நாளைய ராசி பலன் (05-06-2026)
மேஷம்:
இன்று உங்களை சுற்றி உள்ள நபர்களின் உண்மை முகத்தில் புரிந்து கொள்வீர்கள். தொழிலில் முதலீடு செய்வது பற்றி ஆலோசனை செய்வீர்கள். மன அமைதி கிடைக்கும்.
ரிஷபம்:
வாழ்க்கை துணையுடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். குடும்பத்தில் உங்களில் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். தொழில் ரீதியாக ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள்.
மிதுனம்:
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஒரு சிலருக்கு வேலையில் பாராட்டுக்கள் கிடைக்கும். பிடித்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். நன்மையான நாள்.
கடகம்:
வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பிடித்த நபர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள்.
சிம்மம்:
உங்களுக்கு தொந்தரவு செய்தவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். தேவையில்லாத போட்டி பொறாமைகளை விடுக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
கன்னி:
நீங்கள் குடும்பத்திடம் தேவை இல்லாமல் சண்டையிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அமைதியை காக்க வேண்டும். ஒரு சிலருக்கு புதிய காதல் மலர்வதற்கான சூழல் உருவாகும்.
துலாம்:
இன்று நீங்கள் எதிர்கால வாழ்க்கையை பற்றிய அதிகமான சிந்தனை கொள்வீர்கள். நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:
இன்று உங்களுக்கு எதிர்பாராத ஒரு செய்திகள் வந்து சேரலாம். மனதில் வீண் குழப்பமும் பயமும் உண்டாகும். ஒரு சில விஷயங்களில் இருந்து நீங்கள் ஒதுங்கி நிற்பது உங்களுக்கு நன்மை தரும்.
தனுசு:
உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். தாயின் உடல் நலனில் அக்கறை காண்பிப்பது அவசியம். குழந்தைகளின் முழு ஆதரவை பெறுவீர்கள்.
மகரம்:
நண்பர்களிடம் தேவை இல்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். ஒருவரிடம் கடன் வாங்குவதையோ கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது. தாய்மாமன் உறவால் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
இன்று உங்கள் உறவினர்களால் உங்களுக்கு சில மனக்கசப்புகள் வரலாம். குழந்தைகளின் படிப்பிற்காக முக்கிய செலவுகளை செய்வீர்கள். வருமானம் உயரும்.
மீனம்:
எதிர்காலத்தைப் பற்றிய பயமும் விரக்தி உண்டாகும். நீங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவுகள் எடுக்கக்கூடிய நிலை வரலாம். சொத்து விவகாரங்களில் பிரச்சனை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |