நாளைய ராசி பலன் (12-11-2025)
மேஷம்:
இன்று மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை எளிதாக சமாளிப்பீர்கள். இன்று அலுவலகத்தில் மறைமுகமான எதிரிகளை சந்திக்க நேரும். வியாபாரத்தில் முன்னேற்றம் அடையும் நாள்.
ரிஷபம்:
குடும்பத்தில் உள்ளவர்களை புரிந்து நடந்து கொள்வீர்கள். வேலையில் சில முக்கியமான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். எதையும் மிக தைரியமாக கையாள்வீர்கள்.
மிதுனம்:
இன்று கணவன் மனைவி இடையே சிறு சிறு வாக்கு வாதம் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. இன்று உடன் வேலை செய்பவர்களிடத்தில் சற்று கவனமாக பேச வேண்டும். செலவுகள் அதிகரிக்கும்.
கடகம்:
உங்களுடைய பழைய சிந்தனைகளால் மனம் சோர்வடையக்கூடிய நாள். உறவினர்கள் வழியே உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மதியம் மேல் மனதில் நிம்மதி பிறக்கும்.
சிம்மம்:
இன்று கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவை இல்லாத பேச்சு வார்த்தைகளில் ஈடுபடாதீர்கள். மாலை மேல் கோயில் வழிபாடு செய்வீர்கள்.
கன்னி:
மனதில் நீண்ட நாட்களாக நினைத்த காரியம் நிறைவேறும். பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். சிலருக்கு உடன் பிறந்தவர்களால் சங்கடம் வரலாம்.
துலாம்:
இன்று உங்கள் நண்பர்கள் வழியே முழு ஆதரவு கிடைக்கும். இன்று உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வேலையில் முன்னேற்றமும் சம்பள உயர்வும் கிடைக்கும் நாள்.
விருச்சிகம்:
குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து செல்வது அவசியம். எதிர்பாராத சில சண்டைகள் சந்திக்கலாம். உங்கள் பெருமைகளை பிறரிடம் பேசாதீர்கள். கவனம் தேவை.
தனுசு:
உடன் இருப்பவர்களிடம் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்கள் மீது முழுமையாக கவனம் செலுத்துங்கள். பிள்ளைகள் ஆதரவு கிடைக்கும் நாள்.
மகரம்:
நினைத்த வேலை நினைத்தபடி நடத்தி நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெறுவீர்கள்.மனதில் உள்ள பயம் விலகும். உழைப்பால் மிக பெரிய உயரம் அடையும் நாள்.
கும்பம்:
இன்று அலுவலகத்தில் உங்கள் நேர்மைக்கான பாராட்டுகளை பெறுவீர்கள். வரவு செலவுகளில் சிக்கனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும் நாள். மதியம் மேல் மகிழ்ச்சி உண்டாகும்.
மீனம்:
கடன் பிரச்சனைக்கு தீர்வை பெறுவீர்கள். சொத்து விவகாரத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மனைவியை புரிந்து கொண்டு நடப்பீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |