நாளைய ராசி பலன்(23-11-2025)
மேஷம்:
சிலர் பொருளாதார சிக்கலை சந்திக்க நேரலாம். ஒரு சிலருக்கு குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் வளரும் முன் அமைதி காப்பது நல்லது. வருமானத்தில் உண்டான தடைகள் யாவும் விலகும்.
ரிஷபம்:
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வெளியூர் செல்ல நேரலாம். உங்கள் குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும் நாள். எதையும் தீர் யோசித்து செயல்பட்டால் நன்மை உண்டாகும்.
மிதுனம்:
இன்று வழக்கு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வீடுகளில் எதிர்பாராத நற்செய்தியால் நன்மை அடைவீர்கள். அமைதி காக்க வேண்டிய நாள்.
கடகம்:
இன்று வெளியூர் பயணம் செல்லும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பிள்ளைகளின் எதிர்காலம் அறிந்து செயல்படுவீர்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
சிம்மம்:
பழைய பிரச்னை ஒன்று நல்ல முடிவை பெரும். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். நம்பிக்கையோடு மேற்கொண்ட வேலையில் லாபம் கிடைக்கும்.
கன்னி:
இன்று சிறிய விஷயத்திற்கு பொய் பேசுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் முக்கிய ஆலோசனையில் அமைதி காப்பது நன்மை அளிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
துலாம்:
காலை முதல் மனம் சற்று பதட்டத்துடன் இருக்கலாம். சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்சனையை சரி செய்வீர்கள். உங்கள் வீடுகளில் நற்செய்தி வந்து சேரும். சேமிப்பு செய்வது அவசியம்.
விருச்சிகம்:
உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வியாபாரத்தில் உங்களின் போட்டியாளர் விலகி செல்வார்கள். உங்களை உதவி என்று கேட்டு சிலர் வரலாம். நன்மையான நாள்.
தனுசு:
உங்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்ளும் நாள். வெளியே செல்லும் பொழுது உங்களின் பொருட்களில் கவனம் தேவை. தேவை இல்லாத விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
மகரம்:
சிலருக்கு புதிய காதல் மலர வாய்ப்புகள் உள்ளது. உடல் நிலையில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் இருக்கும். உங்கள் வீடுகளில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்:
தொழில் செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பு உயரும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடை யாவும் விலகும். திருமண வாழ்க்கையில் சந்தித்த கசப்புகள் விலகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
மீனம்:
இன்று எதிர்காலம் பற்றிய சிந்தனையும் பயமும் விலகும். சிலருக்கு திடீர் பண வரவு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களை சுற்றி உள்ள நபரின் உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |