இன்றைய ராசி பலன்(25-11-2025)
மேஷம்:
ஒரு சிலருக்கு இன்று உடல் நிலையில் சில சங்கடங்கள் வரலாம். எதையும் தீர ஆலோசித்து முடிவெடுப்பது நன்மை அளிக்கும். திடீர் கோபம் மற்றும் தேவை இல்லாத பேச்சு வார்த்தைகளை தவிர்க்கவும்.
ரிஷபம்:
வேலை பளு சிலருக்கு அதிகம் வரலாம். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட மோதல் விலகும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்த பொருட்களை வாங்கி மகிழும் நாள்.
மிதுனம்:
வழக்கு தொடர்பான விஷயங்கள் அவர்களுக்கு சாதகமாக அமையும். முன் பின் தெரியாத நபர்களால் உங்களுக்கு சில குழப்பங்கள் வரலாம். மதியம் மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை,
கடகம்:
இன்று உங்கள் சொந்தங்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும் நாள். எதிர்காலம் பற்றிய கவலையும் பயமும் விலகும். நீண்ட பண பிரச்சனை முடிவிற்கு வரும். மனதில் பயம் விலகும்.
சிம்மம்:
இழுபறியாக இருந்த பிரச்சனை முடிவிற்கு வரும். உங்கள் எதிகரிகளின் தொல்லை விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் பலனும் பெறுவீர்கள். நன்மையான நாள்.
கன்னி:
உங்கள் தவறுகளை நினைத்து மனம் வருந்துவீர்கள். சட்ட சிக்கல்களில் இருந்து விடுபடும் நாள். உங்கள் எதிர்காலம் பற்றிய பயத்திற்கு விடை பெறுவீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
துலாம்:
இன்று உங்கள் சொந்த விஷயங்களில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனை கேட்டு நடப்பார்கள். நட்பு வட்டாரம் விரிவடையும் நாள். மதியம் மேல் நற்செய்தி வரும்.
விருச்சிகம்:
நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பொன்னான காலம் ஆகும். அரசாங்க ரீதியாக நீங்கள் நன்மை மற்றும் வெற்றி அடையும் நாள்.
தனுசு:
உங்கள் பிள்ளைகள் எதிர்காலம் பற்றி ஆலோசனை செய்வீர்கள். வம்பு வழக்குகளில் இருந்த சிக்கல்கள் விலகும். தொலை தூர பயணம் மேற்கொள்ளும் பொழுது மிகுந்த கவனம் தேவை.
மகரம்:
நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடைகள் வரலாம். அலுவலகத்தில் உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். பிரிந்து சென்ற சொந்தங்கள் உங்களை மீண்டும் வந்து தொடர்பு கொள்வார்கள்.
கும்பம்:
உங்களின் வியாபாரம் செழிப்படையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயம் இன்று நிறைவேறும். தொழில் ரீதியாக சந்தித்த சிக்கல்கள் விலகி முன்னேற்றம் அடையும் நாள்.
மீனம்:
இன்று வாழ்க்கையை பற்றிய புரிதல் உண்டாகும். கடந்த கால தவறுகளை நினைத்து மனம் வருந்துவீர்கள். இன்று பிறர் மனம் காயப்படும் வகையில் எந்த வார்த்தைகள் விடாமல் தவிர்ப்பது நல்லது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |