இன்றைய ராசி பலன்(17-08-2025)

Report

மேஷம்:

இன்று முக்கியமான வேலைகளை எளிதாக செய்து முடித்து நற்பெயரை வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் விலகும். எதிர்பாராத நபர்களிடமிருந்து பரிசு பொருட்களை பெறுவீர்கள்.

ரிஷபம்:

ஒரு சிலருக்கு உடல் சோர்வு உண்டாகலாம். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்கும் நாள். குடும்பத்தினர் உங்கள் நலன் கருதி செயல்படுவார்கள்.

மிதுனம்:

இன்று எதிர்காலம் பற்றிய கவலையும் பயமும் உருவாகும். பெற்றோர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். வாழ்க்கைத் துணையை பற்றி புரிந்து நடந்து கொள்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு செலுத்துவீர்கள்.

கடகம்:

சிலருக்கு கணவர் வீட்டாருடன் சில மனக்கசப்புகள் உருவாகலாம். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய பயம் விலகும். கணவன் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள்.

சிம்மம்:

வியாபாரத்தில் சில தடைகளை சந்திப்பீர்கள். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும். குடும்பத்தினர் ஆலோசனையை பெற்று காரியத்தில் வெற்றி அடைவீர்கள்.

கன்னி:

மாணவர்கள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். வாழ்க்கை முன்னேற்ற பயணத்திற்கான முயற்சியை செய்வீர்கள். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.

2025 கிருஷ்ண ஜெயந்தி: கிருஷ்ணரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 5 முக்கியமான பாடங்கள்

2025 கிருஷ்ண ஜெயந்தி: கிருஷ்ணரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 5 முக்கியமான பாடங்கள்

துலாம்:

மனதில் தைரியமும் அமைதியும் பிறக்கும். வாழ்க்கையை பற்றிய புரிதல் உண்டாகும். யாரிடம் எப்படி அணுக வேண்டும் என்று கற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படும் நாள்.

விருச்சிகம்:

மருத்துவ செலவுகளை சிலர் சந்திக்க கூடும். கணவன் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். சட்டம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.

தனுசு:

உடல் நிலையில் சில மாற்றங்கள் உருவாகும். குடும்பத்தினரின் உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள். எதையும் துணிந்து செய்யும் தைரியம் பிறக்கும். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மகரம்:

வாழ்க்கையைப் பற்றிய குழப்பங்கள் விலகும். வாழ்க்கை துணையை பற்றி புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவழிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.

கும்பம்:

சிலர் வீட்டிற்கு நண்பர்கள் வருகையால் கொண்டாட்டமாக இருக்கும். சிலருக்கு காதல் மலர வாய்ப்புகள் உண்டு. மனதில் சந்தோஷமும் நிம்மதியும் பிறக்கும். வாழ்க்கையை பற்றிய பயம் விலகும் நாள்.

மீனம்:

நீண்ட வருடமாக காத்திருந்த செயல் வெற்றியை பெறப்போகிறது. பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று இணைவீர்கள. நிலம் வீடு வாங்கும் யோகம் உருவாகும். பணக்கஷ்டம் விலகி மகிழ்ச்சி பெருகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US