இன்றைய ராசி பலன்(06.12.2024)
மேஷம்
நீங்கள் எதிர்பார்த்த விஷயம் ஒன்று நடக்கும்.இன்று உங்கள் அணுகுமுறை உங்களுக்கு சாதகமாக அமையும்.உடல் நலம் சீராகும்.திட்டமிட்டபடி வேலையை செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்
இன்று மிகவும் கவனமாக செயல்படவேண்டிய நாள்.வரவேண்டிய பணம் சரியான சமயத்தில் கையில் வந்து சேரும்.பெற்றோர்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தவேண்டும்.குடும்பத்தினருக்கு உதவியாக இருப்பீர்கள்.
மிதுனம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடர்வதால் திட்டமிட்டபடி நடந்து கொள்வது நன்மை தரும்.வருமானம் அதிகரிக்கும்.உடல்நிலை சரி இல்லாமல் போகலாம்.கவனம் அவசியம்.
கடகம்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றியும் பணவரவும் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
சிம்மம்
உங்கள் எண்ணம் நிறைவேறும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.நிரந்தர வருமானத்திற்கு வழி காண்பீர். உங்கள் முயற்சி ஆதாயமாகும். சேமிப்பில் கவனம் செல்லும்.
கன்னி
உங்கள் மனம் தெளிவடையும்.எதிர்காலம் பற்றிய சிந்தனை உங்களுக்கு பயம் உண்டாக்கும்.எதிர்பாராத விதமாக உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
துலாம்
இன்று சற்று சோர்வாக காணப்படுவீர்கள்.குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.வாழ்க்கை துணையுடன் உண்டான பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
விருச்சிகம்
உங்களை அலட்சியம் செய்தவர்களும் ஆச்சரியத்துடன் பார்க்கும் வகையில் பிறரால் முடியாத வேலைகளை செய்து முடிப்பீர்.பழைய முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர். பெரியோர் ஆதரவால் எண்ணம் நிறைவேறும்.
தனுசு
பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும்.உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கு உயரும்.
மகரம்
எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. புதிய முயற்சி எதுவும் இன்று வேண்டாம். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
கும்பம்
குடும்பத்தினர் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டியதாக இருக்கும். செயல்களில் நெருக்கடி ஏற்படும். பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். இன்றைய நாளில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
மீனம்
குடும்பத்தில் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்.செய்யும் தொழில் நல்ல வருமானம் கிடைக்கும்.மகள் வழியில் நல்ல ஆதரவாக இருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |