இன்றைய ராசி பலன் (07.10.2024)
மேஷம்
வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மை தரும்.பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.
ரிஷபம்
வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி குறையும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.
மிதுனம்
தொழிலில் தோன்றிய பிரச்சனையை சரி செய்வீர்கள்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வழக்கு வெற்றியாகும்.உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கடகம்
மனக் குழப்பம் விலகும்.உறவினர்கள் ஆதரவால் வேலை நடக்கும்.செயல்களில் லாபம் உண்டாகும். திட்டமிட்ட வேலை நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும்.
சிம்மம்
சிறு தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது அவசியம்.வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சியில் சில தடை உண்டாகும்.கடன் கொடுத்தவர்களால் பிரச்சனை உருவாகலாம்.
கன்னி
வியாபாரத்தில் இருந்த தடை விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதீப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.பணிபுரியும் இடத்தில் பொறுப்பு கூடும்.உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
துலாம்
நேற்று எதிர்பார்த்த தகவல் இன்று வரும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.
விருச்சிகம்
மனக்குழப்பம் விலகி தெளிவுண்டாகும். உங்கள் தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.நினைத்த வேலையை நடத்தி முடிப்பீர். நீண்டநாள் கனவு நனவாகும்.
தனுசு
திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.வரவை விட செலவு அதிகரிக்கும். காணாமல் போன பொருள் கையில் கிடைக்கும். உழைப்பினால் விருப்பம் பூர்த்தியாகும்.
மகரம்
நண்பர்களால் ஏற்படும் உதவி நன்மை தரும்.நீண்ட நாள் கைக்கு வராமல் இருந்த பணம் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.உங்கள் செல்வாக்கு உயரும்.
கும்பம்
வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சிறு வியாபாரி நன்மை அடைவர்.மனக்குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும்.
மீனம்
சிலர் உதவியால் முயற்சி வெற்றியாகும். உடன் பணிபுரிபவர்கள் ஆலோசனை நன்மை தரும்.மனக்குழப்பம் விலகும்.மனதில் தெய்வ சிந்தனை அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |