இன்றைய ராசி பலன்(12.10.2024)
மேஷம்
நீண்ட நாள் போட்டியாளர் மற்றும் எதிரிகள் விலகி செல்வார்கள்.உங்கள் செயல் லாபமாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும்.சிக்கலில் இருந்த பணம் வரும்.
ரிஷபம்
வெளியூர் பயணம் நல்ல மாற்றத்தை தரும்.ஒரு சிலர் இறை வழிபாட்டை மேற்கொள்வீர்.எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பால் நன்மை அடைவீர்.
மிதுனம்
பழைய பிரச்னை மீண்டும் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.வண்டி வாகனங்களில் சற்று கவனமாக செயல்படுவது நல்லது.
கடகம்
நண்பர் உதவியுடன் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும்.நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
சிம்மம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்திற்குரிய முயற்சி வெற்றியாகும்.வெளி வட்டாரத்தில் ஆலோசனைக்கு வரவேற்பு இருக்கும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.
கன்னி
செய்து வரும் தொழிலில் இருந்த தடை விலகும். முயற்சிக்கேற்ற லாபம் காண்பீர்.புதிய பொறுப்பு தேடிவரும். அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து இணைவர்.
துலாம்
எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சேமிப்பில் கவனம் செல்லும். புதிய முயற்சியில் ஈடுபட்டு லாபம் காண்பீர்.
விருச்சிகம்
எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.வியாபாரத்தில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசாங்க வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். மனம் தெளிவடையும்.
தனுசு
விருப்பம் நிறைவேறும்.வாடிக்கையாளரிடம் அனுசரித்து வியாபாரத்தில் லாபம் காண்பீர். தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
மகரம்
திட்டமிட்ட செயல் வெற்றியாகும். தேவை பூர்த்தியாகும்.புதிய வாய்ப்பு உங்களைத் தேடிவரும். அதில் கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர். மனதில் நம்பிக்கை உண்டாகும்.
கும்பம்
நீங்கள் மேற்கொண்ட வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தினர் மீது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.திடீர் செலவு ஏற்படும். தக்க சமயத்தில் நண்பர் உதவி புரிவர்.
மீனம்
உங்கள் செல்வாக்கு உயரும்.மனதில் நினைத்தவை நடந்தேறும்.எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த மன கவலைகள் குறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |