இன்றைய ராசி பலன்(23.09.2024)
மேஷம்
வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும் நாள். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம்
இன்று மற்றவரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வீடு மனை விவகாரத்தில் சில பிரச்னைகள் உண்டாகும்.அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
மிதுனம்
இன்று வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் நல்ல லாபம் எடுக்கும் நாள்.தேவைகள் பூர்த்தியாகும்.மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்
வியாபாரத்தில் சிறு சிறு சங்கடம் உருவாகலாம்.பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகளை நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
சிம்மம்
உங்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும்.சிந்தித்து செயல்பட்டு லாபம் காணும் நாள். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.
கன்னி
மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். செயல்களில் தடை ஏற்படும்.கடன் கொடுத்த பணம் திரும்பி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
துலாம்
பயணத்தில் சில பிரச்னைகளை சந்திக்க நேரும்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
விருச்சிகம்
உடன் பணிபுரிபவருடன் மனவருத்தம் ஏற்படலாம்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் அதிகரிக்கும்.
தனுசு
மற்றவரால் முடியாத ஒரு செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர். உங்கள் திறமை வெளிப்படும் நாள். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
மகரம்
விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.வரவால் வளம் காணும் நாள். முயற்சி வெற்றியாகும்.
கும்பம்
மறைமுக எதிரிகளால் சங்கடங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பிரச்னைகள் தோன்றும்.தேவைகள் பூர்த்தியாகும் நாள். வருமானத்தில் உங்கள் கவனம் செல்லும்.
மீனம்
அலுவலகத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர்.முயற்சி வெற்றியாகும் நாள். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.மனதில் தெளிவு உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |