இன்றைய ராசி பலன்(23.10.2024)
மேஷம்
உங்களுடைய செயலில் வேகம் அதிகரிக்கும்.வியாபாரம் நல்ல வருமானம் பெற்று தரும்.தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.அன்றாடப் பணிகளில் சிறு சிறு சிக்கல் ஏற்படலாம்.
ரிஷபம்
புதிய முயற்சி லாபம் தரும்.சுய தொழில் செய்து வருவோரின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தனியார் நிறுவன ஊழியர்களின் தேவை பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும்.
மிதுனம்
கவனமாக செயல்படுவதால் சங்கடங்களைத் தவிர்க்கலாம்.உழைப்பின் வழியே உயர்வு காணலாம். நீங்கள் ஈடுபடும் வேலையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
கடகம்
எதிர்பார்த்த பணம் வருவதில் தாமதம் ஏற்படும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் காண்பீர்.அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மனக் குழப்பம் விலகும்.
சிம்மம்
வியாபாரத்தில் ஏற்பட்ட தடை அகலும். வருமானம் அதிகரிக்கும்.பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். உங்களுக்கு ஆதரவாக இருந்தவர் மாற்றுப் பாதையில் செல்வர்.
கன்னி
வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும்.உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விருப்பம் எளிதாக பூர்த்தியாகும். செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
துலாம்
எதிர்பார்த்த பணம் கிடைக்கும். நெருக்கடி நீங்கும்.நேற்றைய பிரச்னைக்கு இன்று தீர்வு காண்பீர். தெய்வ வழிபாட்டால் மனம் தெளிவடையும். வருமானம் திருப்தி தரும்.
விருச்சிகம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் மனக்குழப்பத்தில் மூழ்கும். கடன் கொடுத்தவர்கள் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர்.நிதானமாக செயல்படுவதால் எதிர்பார்க்கும் நன்மை உண்டாகும்.
தனுசு
குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.வருமானம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் உங்கள் கணக்கு வெற்றியாகும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.
மகரம்
விஐபிகள் உதவியால் நடக்காத வேலை ஒன்று நடந்தேறும்.பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும்.
கும்பம்
குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உறவினர்கள் உதவியுடன் உங்கள் வேலை நடந்தேறும்.குடும்பத்தினர் கூறும் ஆலோசனையை ஏற்பது நல்லது.
மீனம்
உங்கள் மனதில் தேவையற்ற சிந்தனை உருவாகும்.நண்பர்களால் சில சங்கடம் தோன்றும்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தாய்வழி உறவு ஆதரவால் நினைத்திருந்த வேலை நடந்தேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |