இன்றைய ராசி பலன்(15-10-2025)

Report

மேஷம்:

இன்று நீங்கள் நினைத்த வேலை சற்று தாமதமாக நடக்கலாம். பயணங்கள் வழியே சந்தோஷங்கள் அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சில அவதூறுகள் உங்களைப் பற்றி வரலாம்.

ரிஷபம்:

இன்று நீங்கள் பக்குவமாக பேசுவீர்கள். சகோதரி உறவுகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். மனதில் தன்னம்பிக்கை பிறக்கக் கூடிய நாள். வெளிநபரால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்:

குடும்பத்தினர் உங்களுக்கு துணையாக இருப்பார். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உருவாகும். வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படும்.

கடகம்:

வேலை செய்யும் இடங்களில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். கலை துறையினருக்கு மிகவும் பொன்னான நாள். சிலருக்கு போட்டி மனப்பான்மையால் சங்கடம் உண்டாகும்.

சிம்மம்:

முடிந்தவரை பிறரிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள். சகோதரி வழியே உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். மனதில் தேவையில்லாத கற்பனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

கன்னி:

மனதளவில் இன்று புத்துணர்ச்சி பெறக்கூடிய அற்புதமான நாள். வண்டி வாகனம் மாற்றும் யோகம் உண்டாகும். சுப காரிய பேச்சுக்கள் நல்ல முறையில் முடிவடையும்.

தங்களை எப்பொழுதும் அழகாகவும் ஆடம்பரமாகவும் காட்டி கொள்ளும் 3 ராசிகள்

தங்களை எப்பொழுதும் அழகாகவும் ஆடம்பரமாகவும் காட்டி கொள்ளும் 3 ராசிகள்

துலாம்:

பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இன்று உங்கள் வீடுகளில் தவறிய முக்கியமான பொருட்களை கண்டுபிடிப்பீர்கள். அரசு துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான காலமாகும்.

விருச்சிகம்:

கணவன் மனைவியிடையே புரிதல் அதிகரிக்கும். இருவரும் புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும் நாள்.

தனுசு:

உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். புதிய நட்புக்களின் அறிமுகத்தால் சில ஆதாயம் பெறுவீர்கள். வாழ்க்கையில் முக்கியமான திருப்பத்தை சந்திக்க கூடிய அற்புதமான நாள்.

மகரம்:

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்:

இன்று வரவிற்கு ஏற்ற செலவுகளும் இருக்கும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பணி தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும்.

மீனம்:

குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்களுடைய தேவையை பூர்த்தி செய்வீர்கள். அக்கம்பக்கத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பார். மனதில் புதுவிதமான கனவுகள் தோன்றி மறையும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US