நாளைய ராசி பலன்(16-10-2025)
மேஷம்:
இன்று உங்கள் வேலையில் இருந்த தடைகள் யாவும் விலகும். தாய் வழியில் உங்களுக்கு சில உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பொறுப்புகள் அலுவலகத்தில் உங்களிடம் ஒப்படைப்பார்கள்.
ரிஷபம்:
குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. அதிரடியாக எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கக் கூடிய நாள்.
மிதுனம்:
தடைப்பட்ட சில காரியங்கள் நல்ல முடிவை பெறும். கலகலப்பான சூழல் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து விடுவீர்கள். புதிய நட்புகள் வட்டாரம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கடகம்:
இன்று திட்டமிட்ட பணிகளில் சில தாமதங்கள் உண்டாகலாம். மற்றவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.
சிம்மம்:
திடீர் செலவுகளால் உங்களுக்கு சில சங்கடம் உண்டாகலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பது சந்தேகம் தான். பெற்றோர்கள் உங்கள் மீது அதிக பாசம் செலுத்துவார்கள்.
கன்னி:
உறவுகள் வழியே சில சுப காரியங்கள் நடக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்விர்கள்.
துலாம்:
இன்று மனதில் அற்புதமான மாற்றம் உண்டாகும். நெருக்கடியான சில பிரச்சனைகளை சரி செய்வீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வாழ்க்கையில் புதிய அனுபவம் கிடைக்கும்.
விருச்சிகம்:
நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்களிடையே சற்று பொறுமையாக பேசுவது நன்மை வழங்கும்.
தனுசு:
இன்று சந்தேக உணர்வுகளால் மனதில் சில குழப்பங்கள் உண்டாகலாம். அரசு காரியங்களில் சற்று நிதானம் தேவை. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மனச்சோர்வு விலகும்.
மகரம்:
இன்று சுபகாரிய செலவுகள் உண்டாகும். வீட்டில் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். புதிய நபர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.
கும்பம்:
எதிர்பாராத சில செலவுகளை சந்திப்பீர்கள். பழைய பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவதற்கான எல்லா சாத்தியங்களையும் செய்வீர்கள். உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.
மீனம்:
இன்று பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வேலையில் உங்களுக்கு சில முக்கியமான உதவிகள் கிடைக்கும். பிறரின் உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







