நாளைய ராசி பலன்(21-09-2025)
மேஷம்:
முடிந்த வரை உங்களின் சொந்த வாழ்க்கையை மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். விருந்தினர் வருகையால் சில மன குழப்பங்கள் வரலாம். கவனம் தேவை.
ரிஷபம்:
இன்று உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். சிலர் வாழ்க்கை துணையிடம் இருந்து சில பரிசு பொருட்களை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம்:
மனதில் ஒரு விஷயத்தை பற்றிய சிந்தனை அதிக அளவில் ஓடி கொண்டு இருக்கும். முடிந்த வரை உங்கள் சொந்த முடிவுகளை நீங்களே எடுக்கவும். சிலருக்கு தலை வலி உண்டாகலாம்.
கடகம்:
இன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். வம்பு வழக்குகளில் நீங்கள் சிக்கி கொள்ளாமல் இருப்பது அவசியம். தேவை இல்லாத வார்த்தைகளை வெளியே பயன் படுத்தாதீர்கள்.
சிம்மம்:
வியாபாரத்தில் உங்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கும் நாள். விடுமுறை தினத்தை மகிழ்ச்சியாக செலவு செய்வீர்கள். சொந்தங்கள் உங்களிடம் வந்து இனிமையாக பேசுவார்கள்.
கன்னி:
சிலருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான பல முக்கிய வாய்ப்புகள் தேடி வரும். காதல் வாழ்க்கை சிலருக்கு கசப்பாக இருக்கலாம். சகோதரன் வழியே சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
துலாம்:
உடல் நிலையில் முழு கவனத்தை செலுத்த வேண்டிய முக்கியமான நாள். தேவை இல்லாத வார்த்தைகளை பயன் படுத்தாதீர்கள். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்.
விருச்சிகம்:
ஒரு சிலருக்கு வீண் செலவுகளை சந்திக்கலாம். குடும்பமாக வெளியூர் சென்று மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். உங்கள் மீது ஒரு சிலர் பொறாமை அடையும் நாள்.
தனுசு:
பிள்ளைகள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். ஒரு சிலருக்கு வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ளாமல் பார்த்து கொள்வது அவசியம். துணையிடம் அனுசரித்து செல்வது அவசியம்.
மகரம்:
ஒரு சிலருக்கு முக்கியமான நபரின் அறிமுகங்கள் கிடைக்கும். உங்கள் முன் கோபத்தை குறைத்து கொள்வது அவசியம். பண பிரச்சனைகளை சந்திக்கக்கூடிய நாள்.
கும்பம்:
உங்கள் நட்புகளிடம் சிலருக்கு வாக்கு வாதம் உண்டாகும். மனதில் காலை முதல் சில பதட்டங்கள் உண்டாகலாம். ஒரு சிலருக்கு வெளியூர் செல்ல நேரும். அமைதி காக்க வேண்டிய நாள்.
மீனம்:
உங்களின் ஆலோசனை கேட்டு சிலர் நடந்து கொள்வார்கள். உங்கள் குடும்பத்தில் சில எதிர்பாராத சிக்கல்கள் உண்டாகலாம். தொலை தூர பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







