இன்றைய ராசி பலன்(30-10-2025)

Report

மேஷம்:

மனதில் இருந்த கவலைகள் விலகும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் சார்பாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை அடையும்.

ரிஷபம்:

கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். குடும்பமாக சுற்றுலா பயணம் செல்ல வாய்ப்புகள் உள்ளது. உழைப்பிற்கு ஏற்ற சம்பளம் பெறக்கூடிய நாள். நட்பு வட்டாரம் விரிவடையும்.

மிதுனம்:

இன்று பிறருக்கு தேவை இல்லாத வாக்கு உறுதிகளை கொடுக்காதீர்கள். வேலை செய்யும் இடங்களில் சில விமர்சன பேச்சுக்கள் வரலாம். விவேகத்துடன் செயல்படக்கூடிய நாள்.

கடகம்:

இன்று சவாலான வேலைகளையும் எளிதாக செய்து விடுவீர்கள். வீடுகளில் சுப காரிய பேச்சுக்கள் நல்ல முறையில் முடியும். வேலை செய்யும் இடங்களில் மதிப்பு உயரக்கூடிய நாள்.

சிம்மம்:

வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வசதி வாய்ப்புகள் நல்ல முறையில் உண்டாகும். இடம் பூமி தொடர்பான விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். நன்மையான நாள்.

கன்னி:

உங்களின் வருமானத்தை உயர்த்துவதற்கான எல்லா வேலைகளையும் செய்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய வண்டி வாகனம் யோகம் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது.

இந்த 2 ராசிகளிடம் பழகும் பொழுது கவனம் வேண்டுமாம்? ஏன் தெரியுமா?

இந்த 2 ராசிகளிடம் பழகும் பொழுது கவனம் வேண்டுமாம்? ஏன் தெரியுமா?

துலாம்:

எதிர்பார்த்த வரவு உண்டாகக்கூடிய நாள். உங்கள் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் விலகும். உழைப்பால் உயரும் நாள். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.

விருச்சிகம்:

இன்று உங்களின் பேச்சு திறமையால் நினைத்த காரியத்தை முடித்து விடுவீர்கள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும். பிள்ளைகள் இன்று பொறுப்புகளுடன் நடந்து கொள்வார்கள்.

தனுசு:

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். இன்று வேலை செய்யும் இடத்தில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

மகரம்:

மனதில் இனம் புரியாத கவலை உண்டாகக்கூடிய நாள். வரவு செலவுகளில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துன்பங்கள் விலகி இன்பம் உண்டாகும்.

கும்பம்:

இன்று குடும்பத்துடன் ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உண்டான குழப்பங்கள் விலகும். வேலை செய்யும் இடத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.

மீனம்:

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவதை பற்றிய சிந்தனை உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US