லட்சுமி தேவியின் அருளை பெற வீடுகளில் இந்த 3 செடிகள் வையுங்கள்
நம் வாழ்க்கையில் செல்வ செழிப்போட வாழவும் பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியோடும் வாழவும் கட்டாயமாக லட்சுமி தேவியின் அருள் நமக்கு தேவை. மேலும் ஒரு மனிதனுக்கு லட்சுமி தேவியின் அருள் அமைந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியை பெற்று விடுவார்கள்.
அப்படியாக, நம்முடைய இந்து மதத்தில் செடிகள் மரங்கள் இவைகள் அனைத்தும் இறைவன் அம்சமாக போற்றி வழிபாடு செய்யப்படுகிறது. அப்படியாக ஒருவர் லட்சுமி தேவியின் அருளை பெறுவதற்கு வீடுகளில் இந்த மூன்று செடிகளை வைத்து வழிபாடு செய்து வந்தால் அவர்களுக்கு லட்சுமி தேவியின் அருளால் வீடுகளில் நிலையான பொருளாதார தன்மை உண்டாகி மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

துளசி:
நம் வீடுகளில் எந்த செடிகள் இருக்கிறதோ இல்லையோ கட்டாயமாக துளசி செடியை வீடுகளில் வைத்திருக்க வேண்டும். துளசி செடி வீடுகளில் இருக்கும் பொழுது நம் வீடுகளில் எதிர்மறை ஆற்றல் சூழ்வது இல்லை. அதே போல் துளசி செடியில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். அது மட்டும் இல்லாமல் துளசி மகாவிஷ்ணுவிற்கு மிகவும் பிரியமான செடியாகும். இதை நம் வீடுகளில் வைத்து துளசி செடிக்கு தினமும் விளக்கேற்றி வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமியின் அருளையும் மகாவிஷ்ணுவின் அருளையும் பெற்று நம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.
மணி ப்ளாண்ட்:
மணி ப்ளாண்ட் இந்தச் செடி அனைவரும் பிடித்த ஒன்றாகும். இதை நம் வீடுகளில் வைப்பதால் நமக்கு அதிர்ஷ்டம் தேடி வருவதாக வாஸ்து ரீதியாக சொல்லப்படுகிறது. மேலும் மணி ப்ளாண்ட் வெள்ளி கிரகத்துடன் தொடர்புடையது. அதனால் இந்த செடியை வீடுகளில் வைக்கும் பொழுது செல்வ செழிப்பு உண்டாகுவதோடு வீட்டை மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்திருக்கிறது.
நெல்லிக்காய் மரம்:
நம் வீடுகளில் கட்டாயம் இருக்கக்கூடிய செடிகளில் நெல்லிக்காய் மரமும் ஒன்று. நெல்லிக்காய் மரம் மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. நெல்லிக்காயில் மகாவிஷ்ணு மற்றும் லட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்பிக்கை இருந்து வருகிறது. ஆதலால் வீடுகளில் நெல்லிக்காய் மரம் வைத்து அதிலும் குறிப்பாக நவமி நாட்களில் நாம் நெல்லி காய் மரத்திற்கு பூஜை செய்து வழிபாடு செய்யும் பொழுது நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது.
ஆக, வீடுகளில் வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்தச் செடிகளை எல்லாம் வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அல்லது பண பரிமாற்றம் செய்யும் அறை அருகில் வைப்பது நேர்மறை ஆற்றலை பெருக்கி நன்மையை அளிக்கும். மேலும் இந்த செடிகளை தொடர்ந்து பராமரிப்பது அவசியமாகும். அப்பொழுதுதான் நமக்கு நிலையான லக்ஷ்மி தேவியின் ஆசிர்வாதத்தை பெற முடியும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். | 
 
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        