இன்றைய ராசி பலன்(16-09-2025)

Report

மேஷம்:

இன்று உங்கள் வீடுகளில் சில முக்கியமான சுபநிகழ்ச்சிகள் நடைப்பெறும். சொந்த வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனை விலகி நன்மை உண்டாகும். சிலருக்கு பண பிரச்சனை விலகி நன்மை உண்டாகும்.

ரிஷபம்:

உங்கள் மனதில் உள்ள ரகசியத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். தொழில் வாழ்க்கையில் இன்று உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தந்தை உங்கள் பேச்சுக்கு ஆதரவு அளிப்பார்.

மிதுனம்:

உங்கள் வீடுகளில் சில குழப்பங்கள் உண்டாகும். வழக்கு விஷயங்களில் சிலர் சிக்கி கொள்ள வாய்ப்புகள் உள்ளது. உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

கடகம்:

இன்று உங்கள் பொருளாதாரத்தில் சில சிக்கலை சந்திப்பீர்கள். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது உங்களுக்கு நன்மை அளிக்கும். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நல்ல ஆசீர்வாதத்தை பெற்று கொடுக்கும்.

சிம்மம்:

குடும்பங்களில் உங்களுக்கு எதிராக சில ஏமாற்றங்களை சந்திப்பீர்கள். முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் மனைவி உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

கன்னி:

உங்கள் குடும்பங்களில் சில குழப்பங்கள் உண்டாகலாம். வேலையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தாய் வழி உறவால் உங்களுக்கு சில சிக்கலை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.

இந்த 3 ராசிகளிடம் மன்னிக்கும் குணமே இருக்காதாம் - அவர்கள் யார் தெரியுமா?

இந்த 3 ராசிகளிடம் மன்னிக்கும் குணமே இருக்காதாம் - அவர்கள் யார் தெரியுமா?

 

துலாம்:

இன்று மனதில் அமைதியும் நிம்மதியும் பிறக்கும். உங்கள் குடும்பம் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செல்வங்கள் சேரும் நாள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமான நிலையில் அமையும்.

விருச்சிகம்:

உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும். கடன்களை அடைப்பீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர்.

தனுசு:

உங்கள் வீடுகளில் சில மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பெண் பிள்ளைகள் வழியில் உங்களுக்கு சில சங்கடமான நிலை உண்டாகும். முன்னோர்கள் வழியே உங்களுக்கு சில நன்மைகள் வரும்.

மகரம்:

விஐபிகள் ஆதரவுடன் தடைபட்ட வேலைகளை நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை சீராகும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போரின் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும்.

கும்பம்:

குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகி செல்லும். உறவினர்கள் உதவியுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். அதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. நீண்டநாள் பிரச்சனை இன்று தீரும்.

மீனம்:

உங்களுக்கு நண்பர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம் பக்கத்தினரிடம் நீங்கள் சற்று கவனமாக பழக வேண்டும்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US