இன்றைய ராசி பலன்( 30-09-2025)
மேஷம்:
இன்று உங்கள் வீடுகளில் அமைதியை காக்க வேண்டிய நாள். உடன் பிறந்தவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்களின் ஆதரவால் சில விஷயங்களை முடிப்பீர்கள்.
ரிஷபம்:
இன்று உடல் சோர்வு அதிகம் காணப்படும் நாள். வீடுகளில் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடக்கலாம். திருமண வாழ்க்கையில் சிலருக்கு எதிர்ப்பாராத மனக்கசப்புகள் வரலாம்.
மிதுனம்:
இன்று உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தைகள் சாதகமான முறையில் முடியும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல் பட்டால் வெற்றிகள் பெறலாம்.
கடகம்:
காலை முதல் சிலருக்கு தலைவலி தொடர்பான பிரச்சனைகள் சந்திக்கக்கூடும். கடன் சுமையால் சிலருக்கு பெரிய அளவிலான கஷ்டங்கள் உண்டாகலாம். பிடித்த பொருட்களை வாங்குவதில் சில சிரமம் வரலாம்.
சிம்மம்:
தொடர்ந்து சிலர் முயற்சிகள் செய்வதால் மட்டுமே வெற்றி அடைய முடியும். தெரியாத நபரிடம் உங்கள் வாழ்க்கை விஷயத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு எதிராக செல்ல வாய்ப்புகள் உள்ளது.
கன்னி:
உங்கள் வீடுகளில் இன்று காலை முதல் சில பதட்டமான நிலை வரலாம். வம்பு வழக்குகளில் சிலர் சிக்கி கொள்ளாமல் பார்த்து கொள்வது அவசியம். தேவை இல்லாத பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும்.
துலாம்:
உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் தெரிவிப்பார்கள். வேலையில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
விருச்சிகம்:
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்து உங்களை வந்து சேரும். மருத்தவ துறையில் இருப்பவர்களுக்கு இன்று நன்மையான நாள். அரசு வழியில் ஆதாயம் பெறுவீர்கள்.
தனுசு:
இன்று சிலருக்கு காலை முதல் வீண் அலைச்சல் மற்றும் சிரமங்கள் உண்டாகலாம். தொழில் ரீதியாக சிலருக்கு சில கஷ்டங்கள் வரலாம். குடும்பத்தில் சில சிக்கல்கள் வந்து சேரும்.
மகரம்:
எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகலாம். இன்று முடிந்த வரை யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். அவசரமாக எந்த வேலையும் செய்யாதீர்கள். கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்:
தொழிலை விரிவு செய்வதை பற்றி யோசிப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தேவை இல்லாத நெருக்கடிகளில் சிக்கி கொள்ளாமல் பார்த்து கொள்வது அவசியம்.
மீனம்:
வியாபாரத்தில் சில சிக்கல் வரலாம். அலுவலகத்தில் சிலருக்கு புகழ் கிடைக்கும் நாள். உங்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும் நாள். உறவினர்கள் வருகை நன்மை அளிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







