நாளைய ராசி பலன்(12-09-2025)
மேஷம்:
இன்று உங்கள் குடும்பத்தில் சில அவ மரியாதையை சந்திப்பீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாடு அல்லது வெளியூர் செல்லும் யோகம் உருவாகும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் சில சங்கடங்கள் ஏற்படலாம்.
ரிஷபம்:
முடிந்தவரை உங்கள் மனதை அமைதி படுத்த தியானங்கள் செய்யுங்கள். எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் பயம் கொள்ள தேவை இல்லை. இறைவன் அருளால் முக்கியமான வேலையை நீங்கள் செய்து முடிப்பீர்கள்.
மிதுனம்:
இன்று உங்கள் மனம் காலையில் இருந்து பதட்டத்துடன் காணப்படும். செய்வதறியாது சில சிக்கல்களில் நீங்கள் மாட்டிக் கொள்ள நேரலாம். கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
காலை முதல் உங்களுக்கு உடலில் சிறு சிறு தொந்தரவுகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பற்றிய கவலை உண்டாகும். அத்தை வழி உறவுகளால் சில சிக்கல்களை சந்திப்பீர்கள்.
சிம்மம்:
இன்று தாய் மாமன் உடன் நீங்கள் மிக எச்சரிக்கையாக பழக வேண்டும். தேவையில்லாத பேச்சுக்களால் வியாபாரத்தில் சில சண்டைகளை சந்திக்கலாம். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும்.
கன்னி:
மாணவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள். உங்கள் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். சிலர் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்கள். அலுவலகத்தில் உங்கள் பெயர் உயரும்.
துலாம்:
இன்று உங்கள் உடலுக்கும் மனதிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நாள். சில ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம். வெளி வட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு உயரும் நாள்.
விருச்சிகம்:
இன்று உங்களுடைய ஆடம்பரங்களை குறைத்துக் கொள்வது நன்மை அளிக்கும். கணவனுடன் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். பொருளாதார சிக்கல்கள் குறைந்து நன்மை உண்டாகும்.
தனுசு:
உங்கள் தாய் வழி உறவுகளின் வழியே சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செல்லப் பிராணிகளிடம் கவனமாக பழக வேண்டும்.
மகரம்:
இன்று நீங்கள் சில சிக்கல்களைக் கடந்து ஒரு சில விஷயங்களை கற்றுக் கொள்ள நேரலாம். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இன்னும் சில தாக்கங்களை உங்களுக்கு கொடுக்கலாம். அமைதி காக்க வேண்டிய நாள்.
கும்பம்:
இன்று முடிந்தவரை உங்களுடைய நட்பு வட்டாரத்தில் மிக கவனமாக பேச வேண்டும். உயர் அதிகாரிகளிடம் நீங்கள் நற்பெயரை பெறுவீர்கள். அரசு வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது அவசியம்.
மீனம்:
இன்று உங்கள் பிள்ளைகளை பற்றி பெருமை அடையும் நாள். பிள்ளைகளுக்கான எதிர்கால ஏற்பாடுகளை செய்து கொடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்திற்காக மருத்துவ செலவுகளை நீங்கள் சந்திக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







