மிதுனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் ராஜ யோகம்
ஜோதிடத்தில் திரிகிரகி யோகம் என்பது முக்கியான நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இந்த யோகம் பலருக்கும் வாழ்க்கையில் ஒரு சிறப்பான பாதையை உருவாக்கி கொடுக்கக்கூடியதாக அமைகின்றது. அப்படியாக 2025 ஆகஸ்ட் 18ஆம் தேதி மிதுன ராசியில் குரு சுக்கிரன் சந்திரன் ஆகியவை இணையுள்ளதால் திரிகிரகி யோகம் உருவாகிறது.
இந்த இணைவு ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை உள்ளது. இதனால் இந்த காலகட்டங்களில் மிகப்பெரிய அதிர்ஷ்டமும் வாய்ப்புகளும் ஒரு சில ராசியினரை தேடி வரப்போகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.
மேஷம்:
இவர்களுக்கு மிதுன ராசியில் இணையுள்ள மூன்று கிரகத்தினால் சமுதாயத்தில் செல்வாக்கு உயரப் போகிறது. வேலை தொடர்பாக செய்யும் ஆலோசனைகள் இவர்களுக்கு சாதகமாக முடியும். தொழில் தொடங்க வேண்டும் என்று முனைப்போடு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை தேடி கொடுக்கப் போகின்றது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி புரிதல் உண்டாகும்.
மிதுனம்:
இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் மனதில் உள்ள குழப்பங்கள் விலகி நன்மை தீமையை அறிந்து கொள்ளும் நிலை உருவாகும். இதனால் இவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்திலும் நிதானத்தை கடைப்பிடித்து வெற்றியை பெற போகிறார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். அரசாங்க பதவியில் இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும் காலம்.
துலாம்:
இவர்களுக்கு முகத்தில் ஒரு பொலிவு உருவாகும் காலமாகும். குடும்பத்தினர் இவர்களைப் பற்றி புரிந்து கொள்ளும் நிலை உருவாகும். இறைவன் மீது அதீத பக்தி உருவாகும். உடல் ஆரோக்கியத்தையும் தொழில் வாழ்க்கையிலும் கவனம் செலுத்தக் கூடிய காலகட்டமாகும். வெளிநாடு சென்று வேலை பார்க்கும் யோகம் உருவாகும். பண விஷயங்களில் ஏற்பட்ட கஷ்டம் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







