வெற்றிகள் குவிய காலபைரவர் வழிபாடு
கால பைரவர் சிவபெருமானின் அவதாரம் என்று நாம் அனைவரும் தெரிந்து இருப்போம்.காலபைரவர் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் ஆவார்.அவரை வழிபட நமக்கு அவர் துணையாக இருந்து நம் வாழ்க்கையில் தைரியமும் ஊக்கமும் கொடுப்பவர்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த காலபைரவர் வழிபாட்டை குடும்பத்தோடு செய்ய நமக்கு சகல நன்மைகளும் கொடுப்பார்.அப்படியாக நாளை கார்த்திகை மாதத்தில் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வருகிறது அன்றைய தினத்தில் நாம் பைரவர் வழிபாடு செய்வது வாழ்க்கையில் வெற்றிகள் கிடைக்கும்.
இந்த வழிபாட்டை மேற்கொள்ள நாளை ஞாயிற்று கிழமை காலை 7:43க்கு அஷ்டமி திதி என்பது ஆரம்பிக்கிறது. அதனால் அன்றைய தினத்தில் காலை 8 மணியில் இருந்து 8:45 க்குள் அல்லது 10:45 லிருந்து 11 45க்குள் அல்லது 1:30லிருந்து 2:30க்குள் அல்லது மாலை 6 மணியிலிருந்து 9:30 மணிக்குள் இந்த வழிபாட்டை நாம் வீட்டில் செய்யலாம்.
இந்த வழிபாட்டிற்கு காலபைரவர் படம் அல்லது சிலை இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.சிவபெருமான் படத்திற்கு முன்பாகவே அமர்ந்து செய்யலாம்.இந்த வழிபாட்டிற்கு ஒரு தாம்பாலத்தை எடுத்து கொண்டு அதில் ஐந்து அகல் விளக்கு வைக்க வேண்டும்.
அந்த ஐந்து அகல் விளக்குகளில் இரண்டு விளக்கில் நல்லெண்ணெயும் மூன்று விளக்கில் நெய்யும் ஊற்ற வேண்டும்.அதில் ஒரு விளக்கில் மட்டும் 27 மிளகு போட வேண்டும்.பிறகு பஞ்சுத்திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த பூஜையில் நெய்வேத்தியமாக உப்பு கலக்காத தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக வைத்து செவ்வரளி மலர்களை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
இந்த அர்ச்சனை செய்யும் பொழுது “ஓம் நமோ பைரவாய நமஹ” என்னும் மந்திரத்தை குறைந்தபட்சம் 27 முறையும் அதிகபட்சம் 108 முறையும் சொல்லி வழிபாடு செய்ய கூடுதல் பலன் கிடைக்கும்.இறுதியாக கற்பூர தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்யவேண்டும்.
இவ்வாறு பூஜை செய்து மனதார நம்முடைய வேண்டுதல் வைக்க நிச்சயம் அந்த இலக்கை அடைய பைரவர் அருள் புரிவார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |