வளர்பிறை சஷ்டியில் விரதம் இருக்கலாமா?
இறைவனை நம்பியவர்கள் கை விடப்படமாட்டார்கள்.அப்படியாக வாழ்க்கையில் என்ன துன்பங்கள் நேர்ந்தாலும் நாம் கடவுளை வணங்கி வழிபாடு செய்ய அது நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் குழந்தை இல்லாதவர்கள் அப்பன் முருகனை நினைத்து மனமுருகி வேண்டுதல் வைக்க கட்டாயமாக வீட்டில் குழந்தை தவழும்.
மேலும் அந்த வேண்டுதலை சஷ்டி திதியில் இருந்து வழிபாடு செய்ய கண்டிப்பாக வீட்டில் மழலை செல்வம் தவழும்.
அதாவது ஐப்பசி மாதத்தில் வரும் கந்தசஷ்டி, மகா கந்தசஷ்டி பெருவிழாவாக கொண்டாடுகிறோம். இந்த ஆறு நாட்களும் ஏராளமானவர்கள் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவது உண்டு.
இது தவிர மாதந்தோறும் வரும் சஷ்டி திதிகளிலும் பலர், தங்களின் வேண்டுதலை வைப்பார்கள். வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு சஷ்டி திதிகள் வருகின்றன.
இந்த இரண்டிலுமே விரதம் இருப்பது சிறப்பானதாகும். பலரும் தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்தால் தான் சிறப்பு என நினைக்கிறார்கள். ஆனால் வளர்பிறை சஷ்டியும் பல விதமான நன்மைகளை தரக் கூடிய முக்கிய விரத நாளாகும்.அதை பற்றி பார்ப்போம்.
அதாவது இந்த வளர்பிறை சஷ்டி விரதம் இருப்பவர்கள் மனதார முருகப்பெருமானை நினைத்தும் முருகனின் மந்திரங்கள் சொல்லியும் உணவுஉண்ணாமலும் இல்லை பால் பழம் எடுத்துக்கொண்டும் விரதத்தை மேற்கொள்ளலாம்.
பிறகு சாயங்கால நேரம் அருகில் இருக்கும் முருகன் கோயில் சென்று வந்து விரதத்தை முடிக்கலாம். அந்த வகையில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி, ஜூலை 11 ம் தேதி இன்று வியாழக்கிழமை வருகிறது.
அன்றைய தினம் காலை 10.19 வரை பஞ்சமி திதியம், அதற்கு பிறகு சஷ்டி திதியும் வருகிறது. முருகப் பெருமானுக்குரிய வியாழக்கிழமையில் சஷ்டி திதி வருவது, அம்பிகை வழிபாட்டிற்குரிய பஞ்சமி திதியுடன் சேர்ந்தே வருவது கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.
பொதுவாக தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்தால் எல்லா கஷ்டங்கள் தீரும் என்பார்கள். அதே போல் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்தால் வெற்றிகள், மகிழ்ச்சி, ஆன்மிகத்தில் வளர்ச்சி ஆகியவை கிடைக்கும்.
நமக்கும் இன்றைய நாளான வளர்பிறை சஷ்டியில் முடிந்தவர்கள் விரதம் இருந்தும் முடியாதவர்கள் முருகனை தரிசித்து அவனின் பரிபூர்ண அருளை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |