தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக சங்கரன்கோயில் சங்கரநாராயண சுவாமி கோயில் அமைந்து உள்ளது.
அந்த கோயிலில் வருடம் வருடம் ஆடித்தபசு விழா மிக விமர்சையாக கொண்டாட பட்டு வருகிறது.
அதாவது இங்கு சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிரித்து பார்ப்பது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார்.
இத்தகைய அரிய நிகழ்ச்சியே ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று அதிகாலை 5 மணிக்கு கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.
இதை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |