தீராத மனக்கவலைகள் தீர அபிராமி அந்தாதி
பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.
நமக்கு வரும் பெரிய பெரிய துன்பங்களை நீக்குவது மட்டும் அல்ல, அவற்றையே இன்பமாக மாற்றித் தருபவள். நாம் செய்த வினை காரணமாக துன்பம் வந்து சேரும். அதில் இருந்து தப்ப முடியாது.
ஆனால், அபிராமி அந்த துன்பங்களை இன்பங்களாக மாற்றி விடுவாள். ஆலகால விஷத்தை அமுதமாக மாற்றியவளுக்கு நம் துன்பங்கள் எம்மாத்திரம்.
பட்டர் குழந்தையாகி விடுகிறார். கொஞ்சம் கூட விகல்பம் இல்லை. கூச்சம் இல்லை. அபிராமி அந்தாதி புரிய வேண்டும் என்றால், பட்டரின் மனநிலைக்கு போய் விட வேண்டும்.
ஒரு குழந்தையின் மன நிலையில் இருந்தால்தான் அது புரியும். சொல்லுக்கு பொருள் தேடும் கவிதை விளையாட்டு அல்ல இது. சொல்லைக் கடந்து, காதலில் கரையும் இரசவாதம் இது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |