கொள்ளையன் அகிலம் போற்றும் முனிவரான சுவாரசிய கதை தெரியுமா?
நம்முடைய பாரதம் போற்றும் காவியம் என்றால் அது ராமாயணம். அதை எழுதியவர் வால்மீகி என்று அனைவரும் அறிவோம். ஆனால், அவருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் சுவாரசிய கதை ஒன்று இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
இங்கு மனிதர்கள் பல இன்னல்கள் கடந்தே சாதனையை செய்ய வேண்டியுள்ளது. அதே போல் வால்மீகி அவர்கள் பலராலும் அஞ்சும் கொள்ளையனாக இருந்து பிறகு அவர் அனைவராலும் மதித்து போற்றக்கூடிய முனிவர் ஆனார்.
வால்மீகி ஒரு காலத்தில் பல இரக்கமற்ற செயலை செய்துகொண்டு இருந்தார். பல வன்முறைகளை செய்து பாவத்தில் மூழ்கிகொண்டு இருந்தாலும், விதி அவருக்கு வேறொன்றை ஒளித்து வைத்திருந்தது. அதாவது, இறைவன் நினைத்தால் நம் வாழ்க்கை மாற ஒரு நொடி பொழுது போதும் அல்லவா?.
அப்படித்தான் வால்மீகி ஒருமுறை நாரதர் முனிவரை சந்திக்கிறார். நாரதரை சந்தித்ததில் இருந்து அவருக்குள் பல்வேறு சிந்தனைகள் எழுந்தது. வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பினார். அந்த தேடுதலில் மிகவும் விரக்தி அடைந்தார். அவர் அறியாமல் செய்த பாவங்களில் இருந்து விடுதலை பெற பரிகாரம் தேடினார்.
இவ்வாறு அவர் தான் செய்தது தவறு என்று உணர்ந்து பரிகாரம் தேடுவதை பார்த்த நாரதர், வால்மீகியின் கண்களில் உண்மையை பார்க்கிறார். பிறகு, வால்மீகிக்கு நீதியும் நேர்மையும், அமைதியின் உருவமான ஸ்ரீ ராமரின் நாமத்தை உச்சரிக்கும்படி கேட்டுக்கொண்டார். தனது விதியை மாற்றத் தீர்மானித்த வால்மீகி, தனிமையான மலைக்குச் சென்று தவம் செய்யத் தொடங்கினார்.
ஸ்ரீ ராமபிரானை பற்றி எதுவுமே அறியாத வால்மீகி, நாரதர் சொன்னதை தவறாக புரிந்துக்கொண்டு ராமருக்கு பதிலாக "மாரா" என்று உச்சரிக்கத் தொடங்கினார். "மாரா" என்பது மரணம் அல்லது பிசாசு என்று பொருள்படும். பொருள் தெரியவில்லை என்றாலும் வால்மீகியின் நோக்கம் சரியானதாக இருந்ததால் பிசாசின் நாமத்தை ஜபித்து வந்த போதிலும், அவர் தூய்மையானவராகவும் ஞானம் பெற்றவராகவும் மாறிவிட்டார் என்பதை உணர்ந்தார்.
அதோடு, நாரதரின் அறிவுரையின் பேரில், இராம நாமத்தை பிழையின்றி வால்மீகி ஜபிக்கத் தொடங்கினார். எல்லோருக்கும் நன்மை மட்டுமே செய்யவேண்டும் என்ற எண்ணம் அவரின் வாழ்க்கையை மாற்றியது. வால்மீகி என்ற பிம்பத்தையே மாற்றினார். மக்கள் மனதில் ஆன்மீகத்தை விதைக்க தொடங்கினார்.
இந்துக்களின் முக்கிய காவியங்களில் ஒன்றான இராமரின் வாழ்க்கையை விவரிக்கும் ராமாயணத்தை வால்மீகி எழுதினார். காலம் கடந்தும் இன்று வால்மீகி எல்லோராலும் பேசப்பட்டு வருகிறார். ஆதலால், தவறுகள் தெரியமால் செய்வதே, அதை உணர்ந்த பிறகு நேர்வழியில் சென்று வாழ்க்கையை தேடி நல்வழி படுத்துவதே நல்ல மனிதனுக்கு அழகு.
நாம் அனைவரும் ராமாயணம் எழுதிய வால்மீகி பிறவியில் இருந்தே ஒழுக்கத்தோடும் நீதி தவறாமல் வாழ்ந்தார் என்றே நினைத்திருப்போம். ஆனால் அவருக்கு பின்னால் இருக்கும் இந்த கதை, நிச்சயம் நம் வாழ்க்கையை பற்றி நல்ல சிந்தனையை கொடுக்கும். அதாவது நாம் மாறினால் நம் வாழ்க்கையும் விதியும் மாறும் என்பதே. மாற்றம் ஒன்றே மாறாதது.
ஜெய் ஸ்ரீ ராம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |