பண கஷ்டத்தை போக்கும் வாராஹி அம்மன் பஞ்சமி தீப வழிபாடு
வாராஹி அம்மன் என்றாலே மனதில் எதையும் எதிர்த்து போராடும் தன்னம்பிக்கை பிறந்து விடும்.அவ்வளவு சக்தி வாய்ந்தவள் வாராஹி அம்மன்.அப்படியாக அவளை மனதார வழிபாடு செய்ய நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றி அம்மன் நம்முடைய வாழ்க்கையை செம்மையாக மாற்றுவாள்.
அப்படியாக வாராஹி அம்மனுக்கு எல்லா நாளும் வழிபாட்டிற்கு உகந்த நாள் என்றாலும் பஞ்சமி திதியில் வாராஹி அம்மனை வழிபாடு செய்ய நம்முடைய மன கஷ்டம் விலக அம்பாள் அருள்புரிவாள். பொதுவாக பஞ்சமி திதி என்பது வாராஹி அம்மனுக்கு உரிய திதி.
அன்றைய தினம் மாலை நேரத்தில் வாராஹி அஅம்மன் வழிபாடு மிக பெரிய மாற்றத்தை வழங்கும்.இந்த மாதம் பஞ்சமி திதியின் விசேஷம் என்னவென்றால் கார்த்திகை மாதத்தில் வந்திருப்பது தான்.மேலும் புதன்கிழமையில் வருகிறது.
புதன் பகவானுக்குரிய எண்ணாகவும் ஐந்து திகழ்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து வரக்கூடிய இந்த நாளில் நாம் இந்த முறையில் பரிகாரம் செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்க்கையின் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது.
இன்றைய நாள் வழக்கம் போல் வாராஹி அம்மனுக்கு வீடுகளில் விளக்கு ஏற்றி நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்வோமோ அதே போல் செய்து கொள்ள வேண்டும்.கூடுதலாக ஒரு தாம்பாள தட்டை எடுத்து கொண்டு 5 எண்ணிக்கையில் சந்தானம் குங்குமம் வைக்க வேண்டும்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படக்கூடியது செம்பருத்தி இவை. கிழியாத நல்ல செம்பருத்தி இலையாக 5 செம்பருத்தி இலையை எடுத்து அதை சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மஞ்சளில் பன்னீரை ஊற்றி நன்றாக கலந்து ஒரு குச்சியை பயன்படுத்தி அந்த இலையின் நடுவில் 555 என்று எழுத வேண்டும். இப்படி ஒவ்வொரு இலையிலும் எழுதிய பிறகு இலையின் நுனி தாம்பாளத்திற்குள் வருவது போல் வட்ட வடிவில் இந்த இலைகள் இருக்க வேண்டும்.
பிறகு செம்பருத்தி இலையின் நுனியில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொண்டு இப்பொழுது அந்த தாம்பாளத்திற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை அந்த தீபத்திற்கு அருகே வைக்க வேண்டும். அந்த ஐந்து ரூபாய் நாணயத்திற்கு மேலே ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். பச்சை கற்பூரத்திற்கு மேலே உடையாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஏலக்காயை வைக்க வேண்டும்.
பிறகு வாராஹி அம்மன் மந்திரங்கள் சொல்ல வேண்டும்.நாம் ஏற்றிய தீபம் குறைந்தது அறை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஆவது எரிய வேண்டும்.பிறகு தீபத்தை குளிர வைத்துக் தீபத்திற்கு அருகில் வைத்திருந்த ஐந்து ரூபாய், பச்சை கற்பூரம், ஏலக்காய் இதை மூன்றையும் ஒரு சிறிய துணியில் அல்லது பிளாஸ்டிக் கவரில் போட்டு கட்டி நாம் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.
பிறகு அவை எல்லாம் ஒரு மாத காலம் அடுத்து தேய்பிறை பஞ்சம் வரும் வரை அப்படியே இருக்கவேண்டும்.பிறகு அதில் இருக்கும் 5 ரூபாய் நாணயத்தை சுப காரியங்களுக்கு செலவு செய்து கொள்ளலாம்.
இந்த முறையில் நாம் வாராஹி அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது நம்முடைய வீட்டில் ஏற்பட்ட எதிரிகள் தொல்லை விலகி வீட்டில் உண்டான பண கஷ்டம் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |