இந்த மாதம் வரலக்ஷ்மி விரதம் எப்பொழுது தெரியுமா?
நாம் அனைவரும் வரலக்ஷ்மி விரதம் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.அதாவது இந்த விரதம் மேற்கொள்வதால் மங்கலவாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த வரலக்ஷ்மி விரதம் ஆனது ஆண்டுதோறும் ஆடி மாத வளர்பிறை வெள்ளியன்று (16/08/2024) கொண்டாடப்படுகிறது.
வரலக்ஷ்மி என்றாலே வரங்களை தருபவள் என்று பொருள்.பக்தர்கள் கேட்கும் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, வரத்தை அருள்பவள் வரலக்ஷ்மி.
பாற்கடலில் உதிர்த்த நன்னாளை, வரலக்ஷ்மி விரத நாளாக அனுஷ்டிக்கிறோம். வரலட்சுமி விரதத்தின் மேன்மையை சொல்லும் புராணக் கதைகள் பார்வதியின் சாபத்திற்கு ஆளான சித்ரநேமி என்ற தேவதை வரலக்ஷ்மி விரதம் அனுஷ்ட்டித்து, சாப விமோசனம் பெற்றார் என்கிறது.
அதாவது சௌராஷ்ட்டிர நாட்டின் ராணியாக இருந்த கரசந்திரிகா செல்வ வளத்தின் ஆடம்பரத்தால் , ஒருமுறை மகாலட்சுமியை அவமதித்தாள்.
கர்வம் கொண்டு இலக்ஷ்மியை அவமதித்ததால், செல்வம் அனைத்தும் இழந்து வறுமையால் வாடினாள். ராணி கரசந்திராவின் மகள் சியாம பாலா , தெய்வாதீனமாக ஒருமுறை வரலட்சுமி விரதத்தைப் பற்றி அறிந்தார்.
அதுமுதல், அந்த விரதத்தை கடைபிடிக்கத் தொடங்கினாள். சியாம பாலாவின் விரதத்தால் மகிழ்ந்த அன்னை மகாலட்சுமி, அவளுக்கு நன்மைகள் அனைத்தும் அருளினாள் தன் மகளின்நிலையைப் பார்த்து, அவள் கடைபிடித்த வரலட்சுமி விரதத்தை தானும் கடைபிடித்தாள் .
இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றாள் கரசந்திரா. மேலும் ஒருவர் வரலக்ஷ்மி விரதம் மேற்கொள்வதால் நீண்ட ஆயுள்,அணைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு வரலக்ஷ்மி விரதம் இருப்பதால் விரைவில் திருமணம் நடக்கும்.
வரலக்ஷ்மி விரதத்தன்று, புண்ணிய நதியில் நீராடுவது ஒரு வருடம் தொடர்ந்து வரலக்ஷ்மி விரதம் இருப்பதற்கு பலனைத்தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |