திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் மிக சிறந்த முருக பக்தர்.அவர் நாள் தோறும் ஆன்மீக சொற்பொழிவை ஆற்றுவதையே அவருடைய கடமையாக கொண்டு இருந்தார்.
"அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.இவருடைய பேச்சு நமக்கு தெளிவு கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
அப்படியாக ஒரு முறை வாரியார் சுவாமிகள் திருவாரூரில் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டு கொண்டு இருக்க,கூட்டத்தில் இருந்த அன்பர் ஒருவர் அன்பின் வெளிப்பாடாக வாரியார் சுவாமிக்கு மாலை வாங்கி வந்தார்.
ஆனால் ஏற்கனவே வாரியார் சுவாமி கழுத்தில் மாலை இருந்ததை பார்த்து,இதை நாம் எப்படி இவருக்கு அணிவிப்பது என்று யோசித்து கொண்டு இருந்தார்.இதை,கவனித்த வாரியார் சுவாமிகள் அவருடைய கழுத்தில் அணிந்து இருந்த மாலையை கழற்றி அருகில் நின்று கொண்டு இருந்த சிறுவனிடம் கொடுத்தார்.
பிறகு வெறும் கழுத்தோடு இருக்கும் வாரியார் சுவாமிக்கு அந்த அன்பர் எந்த ஒரு தயக்கமும் இன்றி வாங்கி வந்த மாலையை அணிவித்தார்.அப்பொழுது சிரித்தபடியே வாரியார் சுவாமிகள் சொல்கிறார் எப்பொழுதுமே நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்தால் தானே அடுத்தவர்கள் நமக்கு கொடுப்பார்கள்!
இப்பொழுது பார்த்து புரிந்து கொண்டீர்களாக?என்றதும் அவரை சுற்றி நின்ற கூட்டம்,கைதட்டி மகிழ்ச்சி அடைந்தது.
ஆக,அன்பு,வெறுப்பு,பணம்,தர்மம்,பகை நாம் பிறருக்கு எதை கொடுகின்றமோ அதுவாகத்தான் நமக்கு திரும்ப வரும்.அதனால் நாம் பிறருக்கு நல்லதை கொடுப்போம்,நல்லதை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |