வீட்டின் பிரச்சினைகள் தீர வாஸ்து பரிகாரம்
வீட்டின் வாஸ்துவிற்கு பிரதானமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் வடகிழக்கு. ஒரு வீட்டில் வடகிழக்கு சரியாக இருந்தாலே அந்த வீட்டில் 50 சதவீதம் நல்லவைகள் நடக்கும், நல்ல காரியங்கள் கூடி வரும்.
அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக திகழ்வதுதான் கன்னிமூலை என்று அழைக்கக்கூடிய வடகிழக்கு மூலை. ஒவ்வொரு வீட்டிலும் வாஸ்து பகவான் இருக்கிறார்.
அப்படிப்பட்ட வாஸ்து பகவானின் தலைப்பகுதி வடகிழக்கு மூலையில் தான் இருக்கிறது என்பதால் தான் வடகிழக்கு மூலையை நாம் பிரதானமாக பார்க்கிறோம்.
ஒரு வீடு எந்த திசையில் அமைந்திருந்தாலும் சரி வடக்கிலோ, கிழக்கிலோ, மேற்கிலோ அல்லது தெற்கிலோ எதுவாக இருந்தாலும் சரி அந்த வீட்டில் உள்ள வடகிழக்கு அறையில் வடக்கிலும், கிழக்கிலும் ஒவ்வொரு ஜன்னல் அமைந்திருப்பது அவசியம்.
இந்த இரண்டு ஜன்னல் ஏன் அவசியம் என்றால் அவை இரண்டும் நம் வீட்டிற்கு கண்கள். எனவே சரியான கண் பார்வை இருப்பவர்களே நல்ல பாதையில் தடுமாற்றம் இன்றி விரைவில் செல்வார்கள்.
அவ்வாறு இந்த இரண்டு கண்களும் சரியான பாதையில் நம் வீட்டை வழி நடத்திச் செல்லும் என்று வாஸ்து ரீதியாக கூறப்படுகிறது.
எனவே உங்கள் வீட்டின் பாதை சரியாக இருக்க வேண்டும் என்றால் உங்கள் வீட்டின் வடக்கு, கிழக்கு ஜன்னல்களை திறப்பது மட்டுமே.
இந்த வடக்கு, கிழக்கு ஜன்னல் 24 மணி நேரம், 365 நாளும், திறந்திருப்பது மட்டுமே உங்கள் வீட்டில் வரும் பிரச்சனைகளுக்கு சிறந்த பரிகாரமாகும்.
நல்ல எண்ணங்கள் மற்றும் நல்ல ஆற்றலை நமக்கும், நம் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுக்கும்.
எனவே உங்கள் வீட்டில் வடகிழக்கு எவ்வாறு உள்ளது என்று உறுதி செய்து கொள்வது நல்லது.
இவ்வாறு வீட்டில் வடக்கிலும் கிழக்கிலும் ஜன்னல் இல்லாதவர்கள் ஒரு அடிக்கு ஒரு அடியாவது திறப்பு கொடுங்கள், ஜன்னல் வைக்க முடியவில்லை என்றாலும் அதற்கு கொசுவலை அடித்து அந்த வீட்டில் குடியிருப்பதால் வீட்டில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
வருமானம் இல்லை, குழந்தைகள் சொல்வதைக் கேட்பதில்லை, மந்தமாக உள்ளார்கள், வீட்டில் சந்தோஷம் நிறைவதில்லை, திருமணம் நடக்கவில்லை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வடகிழக்கு ஜன்னல்களை திறந்து பாருங்கள்.
அங்கேயே உங்களுக்கு 50 சதவீத மாற்றம் தெரிந்து விடும். பிறகு ஒவ்வொரு திசைகளாக வாஸ்து பார்த்து சரி செய்து வர உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் சரியாக விடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |