தவறியும் வடக்கு திசையில் இந்த பொருட்களை மட்டும் வைக்காதீர்கள்
ஜோதிட சாஸ்திரத்தில் வாஸ்து என்பது மிக முக்கியமாக பார்க்கக்கூடிய ஒரு விஷயமாகும். வாஸ்து ஒருவருடைய வாழ்க்கையே நிர்ணயிக்கிறது என்று சொன்னாலும் தவறில்லை. காரணம் வாஸ்து சரியாக இருந்தால் ஒருவரை வெற்றி பெறவும் செய்கிறது வாஸ்து சரியில்லாத இடத்தில் அமரும் பொழுது அவர்களுக்கு தோல்வியும் அமைகிறது. அப்படியாக வாஸ்து ரீதியாக மறந்தும் வடக்கு திசையில் ஒரு சில பொருட்களை மட்டும் வைக்கக்கூடாது என்கிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம்.
ஒருவர் வீடுகளில் திடீரென்று பணக்கஷ்டம் பொருளாதார இழப்புகள் சந்திக்கூடும். அதற்கு காரணம் அவர்கள் அறியாமல் செய்திருக்கும் சில வாஸ்து தவறுகளே. அந்த வகையில் வீடுகளில் அவரவர்களுக்கு ஏற்ப தண்ணீர் தொட்டியை அமைத்து இருப்பார்கள்.
ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி ஒரு தண்ணீர் தொட்டி தவறான திசையில் அமையும் பொழுது அவர்கள் வீட்டில் பொருளாதாரம் பிரச்சனையும் பொருளாதார இழப்புகளும் ஏற்படுவதாக சொல்கிறார்கள். அதே போல் தான் கழிப்பறையும் நம்முடைய வசதிக்கேற்ப தங்கும் அறைகளில் வைப்பதுண்டு. கழிப்பறையும் தவறான திசைகளில் அமைந்துவிட்டால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.
ஆக இவை இரண்டும் வடக்கு திசையில் அமையாமல் இருப்பது நன்மையை தரும். அதைப்போல் வீடுகளில் கிழிந்த துணியை ஒரு பொழுதும் நாம் வைத்திருக்கக் கூடாது.
கிழிந்த துணி என்பது எதிர்மறை ஆற்றலை பெற்று கொடுக்கக்கூடிய ஒரு விஷயமாகும். ஆதலால் கிழிந்த துணிகளை உடனே அகற்றுவது வீடுகளில் நன்மையை உண்டாக்கும்.
மிக முக்கியமாக நம் வீட்டில் நுழை வாசலில் காலணிகளை கழற்றி விடுவது நன்மையாகாது. மகாலட்சுமி வருகை தரும் இடம் என்பதால் காலணிகளை வேறு சில இடங்களில் வைப்பது அல்லது நுழைவாயில் இருந்து சற்று விலகி வைப்பது நல்லதாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







