2025 பரிவர்த்தினி ஏகாதசி : இன்று மறந்தும் இந்த விஷயங்களை மட்டும் செய்து விடாதீர்கள்
ஏகாதசி என்பது பெருமாள் வழிபாட்டிற்குரிய ஒரு மிகச் சிறந்த நாளாகும். அன்றைய தினம் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய பாவங்கள் குறைந்து புண்ணியம் கிடைக்கிறது. அதோடு அன்றைய தினம் பெருமாள் மந்திரங்களை பாராயணம் செய்து அவருக்கு பிடித்த துளசி மாலை, தாமரை மலர்களை சமர்ப்பித்து வழிபாடு செய்வது வாழ்க்கையில் பல வெற்றிகளை தேடி கொடுக்கும்.
அப்படியாக, ஏகாதசி விரதத்தில் மிக முக்கியமான விரதம் ஆவணி மாத வளர்பிறையில் வரும் பரிவர்த்தினி ஏகாதசி ஆகும். இந்த விரதம் மகாளய பட்சத்திற்கு முன்பு வரும் ஏகாதசி என்பதால் இதற்கு எப்பொழுதும் ஒரு தனி சிறப்பு உண்டு.
அதேப்போல், புராணங்களில் தெய்வீக நித்திரையில் இருக்கும் மகாவிஷ்ணு இந்த நாளில் தான் அவருடைய சயன நிலையை மாற்றிக் கொள்வதாக சொல்லப்படுகிறது. அதோடு மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்தை எடுப்பதற்கு முன்பு வரும் ஏகாதசி என்பதாலும் இது மிகச்சிறந்த நாளாக சொல்லப்படுகிறது.
அப்படியாக, இந்த 2025 ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி அன்று பரிவர்த்தினி ஏகாதசி வருகிறது. இந்த நாளில் நாம் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்தால் நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கின்ற துன்பங்கள் விலகி , முன் ஜென்மத்தில் செய்த பாவங்களும் அதனால் வரக்கூடிய கர்ம வினைகளும் குறைகிறது.
இன்றைய தினம் பக்தர்கள் கட்டாயம் பெருமாளின் ஏகாதசி கதைகள் கேட்பதும், புராண கதைகள் படிப்பதும் நமக்கு ஆயிரம் அஸ்வமேதை யாகம் செய்த பலனை கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த நாளில் நாம் சில விஷயங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள் அதைப் பற்றி பார்ப்போம்.
பரிவர்த்தினி ஏகாதசியில் செய்ய கூடாதவை :
1. இன்று ஏகாதசி பரிவர்த்தினி விரதம் இருப்பவர்கள் கட்டாயம் தானியங்கள் அரிசி வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.
2. முடிந்த வரை கோபத்தை கட்டுப்படுத்தி யாருடனும் வாக்குவாதம் செய்யாமல் தீய செயல்களில் ஈடுபடாமல், பொய் சொல்லாமல் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் மனதில் பெருமாளை நிறுத்தி வழிபாடு செய்ய வேண்டும்.
3. இந்த நாளில் கட்டாயம் சோம்பேறியை விடுவிக்க வேண்டும். இந்த நாளில் காலையில் குளிப்பதை தவிர்த்து, பகலில் குளிப்பது போன்றவை செய்தல் கூடாது.
4. இன்றைய நாள் விரதத்தை கடைபிடிக்க முடியவில்லை என்றாலும் மது அசைவ உணவு தாமத உணவுகளை சாப்பிடுவதை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







