நாம் எப்பொழுது தான் இதை உணர்ந்து கொள்ள போகிறோம்?
இந்த உலகத்தில் காலம் காலமாக பல வேதனை மற்றும் துன்ப களங்களில் சிலரால் சொல்லப்பட்டு வரக்கூடிய ஒரு விஷயம் "தனியாகத்தான் இந்த உலகத்திற்கு வந்தோம், தனியாகத்தான் இந்த உலகை விட்டு பிரிந்து போகின்றோம்" என்று. மேலும் இதை நாம் பல இடங்களில் பலர் சொல்லி வருவதை பார்க்க முடியும். இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தால் நாம் என்று தான் இந்த உலகத்தையும் இந்த பிரபஞ்சத்தை பற்றியும் புரிந்து கொள்ள போகின்றோம்.
இந்த உலகத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு முக்கியமான செயல்களில் ஒன்று ஒருவருக்கு துணையாக இருப்பதும் அவர்கள் மனதில் நல்ல சிந்தனையை விதைப்பது மட்டுமே ஆகும்.
அப்படியாக, சிறு குழந்தைகளில் தொடங்கி, எவரோ சொல்லிவிட்டு சென்ற "தனியாகத்தான் வந்தோம் தனியாகத்தான் உடலை விட்டு இந்த உயிர் பிரியப் போகின்றது" இந்த வசனங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் அவர்கள் அடிக்கடி சொல்வது கட்டாயம் வேதனை தரக்கூடிய விஷயம் தான் இருக்கிறது.
இந்த வார்த்தைகள் நமக்கு உண்மையில் ஒரு தண்டனையை தான் கொடுக்கிறது. அதோடு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள் என்றும், தனிமையில் தான் கட்டாயம் வாழ்க்கை வாழ வேண்டும் என்று அவர்களுக்கு எதிர்மறையாக ஊக்கப்படுத்துகிறது.
கட்டாயமாக, இந்த உலகத்தில் தனியாக எவரும் பிறப்பதில்லை இறப்பதும் இல்லை. பிறப்பும் இறப்பும் வேண்டுமானால் மாயையாக இருக்கலாம். ஆனால் தனியாக இங்கே பிறக்கவும் முடியாது, இறப்பிற்கு பின்பு அவர்களே அவர்களை அடக்கம் செய்து கொள்ளவும் முடியாது.
பிறப்பதற்கும் இறந்தால் அடக்கம் செய்வதற்கும் யாரோ இரண்டு நண்பர்கள் தேவை படுகிறார்கள். அதை இந்த பிரபஞ்சம் நமக்காக கொடுத்து கொண்டு தான் இருக்கிறது.
ஆக இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு மனிதனுக்காக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பஞ்சபூதங்கள் ஒவ்வொரு மனிதனுக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது. இவர்களை எல்லாம் நாம் என்று போற்றி பாராட்ட போகிறோம், நன்றி உணர்வுடன் இருக்கப் போகிறோம்.
இவர்களை எல்லாம் மறுத்துவிட்டால் வேண்டுமானால் தனிமை வரலாம். அது நமக்கு நாமே கொடுத்துக் கொடுக்கக் கூடிய தண்டனை ஆகும். நாம் சற்று நிதானமாக அமர்ந்து யோசித்துப் பார்த்தால் இந்த பிரபஞ்சம் நாம் எங்கெல்லாம் தனிமையில் விடப்பட்டிருக்கிறோம் என்று நினைத்து வருந்துகிறோமோ அங்கு எல்லாம் நமக்காக ஒரு நபரை அனுப்பி வைக்கிறது.
உண்மையில் நாம் எப்பொழுதும் தனிமையில் விடப்படுவதில்லை. ஆனால் நாம் தான் நம்மை சுற்றி உள்ளவர்களை சரியாக கவனிப்பது இல்லை. காரணம் நாம் நினைத்துக் கொண்டு இருக்கும் விஷயங்கள் நடக்காமல் போவதால் நம்மை சுற்றி நடப்பதை நாம் பார்க்க மறுக்கின்றோம்.
அதனால், தனியாக பிறந்தோம் தனியாகத்தான் இருக்கின்றோம் என்ற ஒரு வாசகத்தை இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் நிறைந்தது. உன் மனதை நீ மட்டுமே புரிந்து கொள்ள முடியும். தனியாக இருந்து உன்னை நீ புரிந்து கொண்டு, தைரியமாக செயல்படு மீதம் உள்ளதை இந்த பிரபஞ்சம் பார்த்துக் கொள்ளும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், இந்த உலகத்தில் மிக மோசமான ஒன்று நன்றி மறப்பது. ஆதலால் நமக்கு தேவைப்படும் நேரத்தில் நாம் விரும்பிய நபர்கள் வேண்டுமானால் நம் அருகில் இல்லாமல் போயிருந்திருக்கலாம் நமக்கு உதவி செய்யாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் முன் பின் தெரியாதவர்கள் கூட நமக்கு உதவி செய்திருப்பார்கள் கட்டாயம் நாம் என்றும் அதை மறந்து விடக்கூடாது. உதவி என்பது நாம் கேட்டதை கொடுப்பதுதான் மட்டுமே இல்லை, சொல்வதைக் கேட்டு ஆறுதல் வார்த்தை கூறினாலும் ஒரு உதவி தான், நம்மை பார்த்து கஷ்ட காலங்களில் ஒரு பொன் சிரிப்பும் பரிவான பார்வை கொடுப்பதும் கூட ஒரு உதவி தான்.
ஆக, இந்த பிரபஞ்சம் பல நல்ல மனிதர்களையும், பல நல்ல ஆற்றல்களையும், பல நல்ல ஆச்சரியங்களையும் வைத்துக்கொண்டு காத்திருக்கிறது. நாம் உணர தவறவிடாமல் வாழ்க்கையை கொண்டாட்டத்தோடு வாழ்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







