வாஸ்து: வீட்டில் குப்பை தொட்டியை இந்த இடத்தில் மட்டும் வைக்காதீர்கள்
வாஸ்து சாஸ்திரம் என்பது இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும்.
வாஸ்து என்பது பண்டைய காலத்தில் கட்டிட கலைக்கான ஒரு எளிய வழிகாட்டி.
வாஸ்து படி, வீட்டில் உள்ள பொருட்களை சரியான திசை நோக்கி வைக்கும் பட்சத்தில் வீட்டில் செல்வம் செழிப்படையும்.
அந்தவகையில், வாஸ்துபடி வீட்டில் குப்பை தொட்டியை எந்த இடத்தில் வைக்கலாம் என்று பார்க்கலாம்.
வடமேற்கு அல்லது தென்கிழக்கு திசைகள் குப்பை தொட்டியை வைக்கலாம். இதனால் வீட்டின் ஆற்றல் சமநிலையை பாதிக்காது.
குப்பை தொட்டியை வீட்டிற்கு வெளியே வைப்பது சிறந்தது. இது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் பரவுவதை தவிர்க்கும்.
வடகிழக்கு திசையில் குப்பைத்தொட்டியை வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் நேர்மறை ஆற்றல் வருவதை தடுக்கப்படுகிறது.
வீட்டின் மையப்பகுதியில் குப்பைத்தொட்டியை வைக்க கூடாது. இந்த இடம் ஆன்மீகம் மற்றும் சமநிலைக்கு முக்கியமானது.
அதேபோல், முக்கிய நுழைவு வாயில்கள், கதவுகள், ஜன்னல்களுக்கு அருகில் குப்பை தொட்டியை வைப்பது எதிர்மறை ஆற்றலை வீட்டிற்குள் கொண்டு வரும்.
சமையலறையிலும் குப்பை தொட்டியை வைப்பதை தவிர்த்து விடலாம். இல்லையெனில் சரியாக மூடி வைக்க வேண்டும்.
குப்பை தொட்டி திறந்திருந்தால் லட்சுமி தேவி வீட்டிற்குள் வரமாட்டார். இதனால் செலவுகள் அதிகரிப்பு, வருமான குறைவு போன்றவை ஏற்படலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |







