வீடு கட்ட சிறந்த நாள் எது?

By Sakthi Raj Jun 16, 2024 08:00 AM GMT
Report

 வீடு இது தான் மனிதனுக்கு உணவிற்கு பின் முக்க்கியமான தேவை.மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு என்பது மிக பெரிய கனவு ஆக இருக்கும்.

அப்படியாக கஷ்ட பட்டு சேமித்து வைத்த பணம் கொண்டு வீடு கட்ட அனைவரும் ஆவலாக இருப்போம். அப்படியாக வீடு கட்ட நல்ல இடம் பார்த்து ஜோதிடர்களை பார்த்து நாள் குறித்து வேலையை ஆரம்பிப்போம்.

வீடு கட்ட சிறந்த நாள் எது? | Veedu Katta Ukantha Naal Vastu Natchathiram Palan

இவ்வாறு தொடங்குபவர்களில் சிலர் சரியாக வீட்டை கட்டி முடித்து விடுகின்றனர். சிலர் முழுமையாக கட்டி முடிக்க முடியாமலும், சிலர் கட்டிய வீட்டை விற்கவும் நேர்கிறது.

இன்னும் சிலர் வீடு கட்டும்போது விபத்துக்கள் நேரிடுவது உள்ளிட்ட பல சிக்கல்களை சந்திக்கிறார்கள்.

அப்படியாக ஒருவர் வீடு கட்டும் பொழுது என்னவெல்லாம் முழுமையாக கவனிக்கவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

வீடு கட்டத் தொடங்கிய முகூர்த்த நாளன்று கோட்சாரத்தில் நிலவிய கிரக நிலைகளே இதற்கு காரணமாகும்.வீடு, கட்டடம் ஆகியவற்றை குறிக்கும் உதாரண கிரகம் சுக்கிரன்.

விதியை மாற்றி எழுதும் கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

விதியை மாற்றி எழுதும் கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

 

வீடு கட்ட ஆரம்பிக்கும் முகூர்த்த நாளன்று கோட்சாரத்தில் சுக்கிரன் இருக்கும் நிலையை அறிந்து தொடங்க வேண்டும்.

அந்த நாளில் சுக்கிரனுக்கு 1-5-9,3-7-11,2-12ஆகிய ராசிகளில் குரு இருந்தால் எவ்விதமான இடையூறுகள், தடைகள் இல்லாமல் நினைத்த படி வீட்டை கட்டி முடித்து விடலாம். தோஷ பாதிப்பும் இல்லாத வீடாக அமைந்து விடும்.

அந்த நாளில் சுக்கிரனுக்கு 1-5-9,2 ஆகிய ராசிகளில் கேது இருந்தால் வீடு கட்ட பணத்தட்டுப்பாடு, கடன், தடைகள் போன்றவை ஏற்பட்டு நினைத்தபடி வீடு கட்ட முடியாமல் தாமதமாகும்.

சுக்கிரனுக்கு 1-5-9,2 ஆகிய ராசிகளில் ராகு இருந்தால் வீட்டின் உரிமையாளருக்கு நோய் தாக்கம் அல்லது கட்டடத்திற்கு விபத்து உள்ளிட்ட சிக்கல்கள் நேரும்.

வீடு கட்ட சிறந்த நாள் எது? | Veedu Katta Ukantha Naal Vastu Natchathiram Palan

மேலும்,வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதம் ஆகியவற்றை சொல்லலாம். இந்த நான்கு மாதங்கள் வீடு கட்டுவதற்கு உகந்த மாதங்கள். அடுத்தபடியாக வீடுகட்ட ஆரம்பிக்கும் நாட்கள் என்று பார்த்தால், அந்த நாள் வளர்பிறை சுப மூஹூர்த்த நாளாக அமைய வேண்டும்.

அல்லது முஹூர்த்த நாளில், முஹூர்த்த நேரத்தில் நாம் வாஸ்து பூஜை செய்யலாம்.

ஆதலால் வீடு கட்டும் பொழுது மிக கவனமாக கட்டி முடிக்க நம்முடைய ஜாதகம் கொண்டு நல்ல ஜோதிடர்களை பின் பற்றுவது நன்மை தரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US