மறந்தும் வீட்டில் ஏற்றக்கூடாத தீபங்கள்
நம்முடைய வீட்டில் தினமும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம்.ஆனால் மறந்தும் நாம் வீட்டில் ஏற்ற கூடாத தீபங்கள் உள்ளது.அதை செய்ய நாம் எதிர்மறை சக்தியால் சூழப்படுவோம்.அந்த வரிசையில் எள் எண்ணெய் கொண்டு வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய கூடாது.
பொதுவாக எள் விளக்கு தீபம் நாம் சனீஸ்வர பகவானுக்காக ஏற்றி வழிபாடு செய்யும் ஒன்று.அதை நாம் வீட்டில் ஏற்றி வழிபாடு செய்ய எதிர்மறை ஆற்றல் உண்டாகும்.அதே போல் நாம் வேண்டுதலுக்காக அம்மனுக்கு ஏற்றும் எலுமிச்சை பழம் தீபத்தை வீட்டில் ஏற்றி வழிபாடு செய்யக்கூடாது.
முறையாக கோயிலில் தான் ஏற்றி வழிபாடு செய்யவேண்டும்.மேலும் உக்கிர தெய்வங்களுக்கு ஏற்றும் படும் எந்த தீபத்தையும் நாம் வீட்டில் ஏற்றி வழிபட கூடாது.எல்லாவற்றிக்கும் நேரம் காலம் இருக்கிறது.அதற்கு ஏற்ப நாம் வேண்டுதல் வைத்து பரிகாரம் செய்தால் தான் முழுப்பலனை அடைய முடியும்.
இன்னும் சில பேர் வீட்டில் எண்ணெய் தீர்ந்து திரி கருகி போகும் அளவிற்கு விளக்கை விட்டு விடுவார்கள்.தினமும் வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் தொடர்ந்து வீட்டில் விளக்கு ஏறிய வேண்டும்.
அப்பொழுது தான் நாம் விக்கு ஏறிய முழுப்பலனை பெற முடியும்.சிலர் ஒரு குறைந்த அளவே விளக்கை எரியவிடுவார்கள் அவ்வாறு செய்யும் பொழுது நாம் விளக்கு ஏற்றிய பலனை பெற முடியாமல் போகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |