மகாளய பட்ச காலத்தில் உணவில் சேர்க்க வேண்டிய மற்றும் சேர்க்ககூடாத காய்கறிகள்
மகா+ஆலயம் என்பதே மகாளயம் என்றானது ஆன்மாக்கள் வகிக்கும் இடம் என்பதே ஆலயம். அதாவது முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து சிறிது நாட்கள் தங்கி நமக்கு ஆசி வழங்குவதில் பெயரேமகாளய பட்சம் எனப்படும்.
இந்த மகாளய பட்சத்தில் யமதர்மனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வருகிறார்கள் என்றும் அவர்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக வருகிறார்கள் என்றும் கருடபுராணம் கூறுகிறது. அவ்வாறு அவர்கள் வரும்போது தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என அனைவரும் தங்கள் நினைப்புடன் இருக்கிறார்களா? உணவும் நீரும் வழங்குவார்களா? என்ற ஏக்கத்தோடு வருவார்கள்.
அப்போது நாம் அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளையோ, பழ வகைகளையோ தானம் செய்தால் அவர்களளின் தாகமும், பசியும் தீர்ந்து மகிழ்வுடன் திரும்பி செல்வார்கள் என்பது நம்பிக்கை.
அப்படியாக நாம் அந்த காலத்தில் எந்த காய்கறிகளை உணவில் சேர்க்கலாம் சேர்க்க கூடாது என்று பார்ப்போம்.
சேர்க்க கூடாத காய்கறிகள்
1. முட்டகோஸ்
2.நூக்கல்
3.முள்ளங்கி
4.கீரை
5.பீன்ஸ்
6.உருளைகிழங்கு
7.காரட்
8.கத்தரிக்காய்
9.வெண்டைக்காய்
10.காலிஃபளவர்
11.ப்ரெக்கோலி
12.பட்டாணி
13.வெங்காயம்
14.பூண்டு
15.பெருங்காயம்
16.தக்காளி
17.கத்தரிக்கா
18.சொள சொள
19.சுரக்காய்
20.வெள்ளை பூசணி
21.மஞ்சள் பூசணி
22.முருங்கக்காய்
23.கோவக்காய்
24.பீட்ருட்
25.பச்சைமிளகாய்
சேர்க்க வேண்டிய காய்கறிகள்
1.அவரக்காய்
2.புடலங்காய்
3.பயத்தங்காய்
4.வாழத்தண்டு
5.வாழைப்பூ
6.வாழக்காய்
7.சக்கரவள்ளி
8.சேனை
9.சேப்பங்கிழங்கு
10.பிரண்டை
11.மாங்காய்
12.இஞ்சி
13.நெல்லிக்காய்
14.மாங்கா இஞ்சி
15.பாரிக்காய்
16.பலாக்காய்
17.மிளகு
18.கரிவேப்பிலை
19.பாசிப்பருப்பு
20.உளூந்து
21.கோதுமை
22.வெல்லம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |