வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கான அனுமதி திகதி நாள் நிறைவு - வனத்துறை அறிவிப்பு

By Kirthiga May 30, 2024 06:05 AM GMT
Report

கோவை மாவட்டம் பூண்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுயம்புலிங்க கோயிலுக்கு செல்ல சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் மலையேறி பலரும் செல்கின்றனர்.

இந்த கோயிலில் தரிசனை பெறுவதற்காக பல பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரை மலையேறுவதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்திருந்தார்கள்.

அதுப்போலவே இந்த ஆண்டும் கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதியில் இருந்து மலையேறுவதற்கு அனுதி வழங்கப்பட்டிருந்தது.

வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கான அனுமதி திகதி நாள் நிறைவு - வனத்துறை அறிவிப்பு | Velliangiri Trek Tomorrow Closing Day

இதில் தினமும் ஏராளமான பக்தர்கள் மெலையேறியுள்ளனர். சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வந்துள்ளனர்.

மலையேறுவதற்கு வனத்துறையினர் அளித்திருந்த அனுமதி நாளையுடன் முடிவுக்கு வரவிருக்கிறது. ஆகவே நாளையில் இருந்து பக்தர்கள் மலை ஏறுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குதொடர்ச்சிமலையில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக அங்குள்ள 5,6,7-வது மலை உச்சியில் தற்போது கடும் குளிர் நிலவி வருவதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் இந்த தடையானது விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US