2026 சுக்கிரன் சுவாதி நட்சத்திரப் பெயர்ச்சி: எந்த ராசியினருக்கு பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்

By Sakthi Raj Nov 28, 2026 06:41 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் முக்கிய கிரகங்களில் ஒன்று சுக்கிர பகவான் அவருடைய சொந்த ராசியான துலாம் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்யக்கூடிய காலம். இந்த நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி ராகு சுவாதி நட்சத்திரத்தில் சுக்கிரன் சுமார் 17 நாட்கள் சஞ்சாரம் செய்ய இருக்கிறார்.

ராகு பகவான் தான் ஒருவருக்கு வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஆடம்பரம் ஆகியவற்றை தரக்கூடியவர். சுக்கிர பகவான் ஒருவருக்கு வசதி, அழகு, ஆடம்பரம், சுகம் ஆகிவற்றை கொடுக்கக் கூடியவராக இருக்கிறார்.

மேலும், சுவாதி நட்சத்திரத்தில் இவர் பயணிக்கும் பொழுது இவர்களுக்கு திடீர் ஆசைகள், ஆடம்பரத்தின் மீது அதிக அளவில் ஆர்வம் உண்டாக கூடிய காலகட்டமாகும். அதேசமயம், எந்த ஒரு கணக்கும் பாராமல் இவர்கள் செலவு செய்யக்கூடிய நிலை வரலாம். அப்படியாக, இந்த மாற்றங்களால் எந்த ராசியினர் அதிகளவு பயன் பெற போகிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

2026 சுக்கிரன் சுவாதி நட்சத்திரப் பெயர்ச்சி: எந்த ராசியினருக்கு பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும் | Venus Swati Nakshatra Transit 2026 Lucky 3 Zodiac

2026 ராகு கேது பெயர்ச்சி: தனுசு ராசியினர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?

2026 ராகு கேது பெயர்ச்சி: தனுசு ராசியினர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் பொருளாதார ரீதியாக ஒரு வலுவான நிலையையும் கொடுக்கப்போகிறது. இவர்களுக்கு வேலை தொடர்பாக அதிகார பதிவையும் சாதகமான நிலையும் உண்டாகும்.

இவர்களுக்கு என்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளப் போகிறார்கள். இவர்கள் செய்யக்கூடிய வேலை உயர் அதிகாரிகள் உடைய கவனத்தைப் பெற்று பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெறுவார்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு திறமை வெளிப்படக்கூடிய காலகட்டமாக அமையப்போகிறது. கலை மற்றும் உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான காலகட்டம். இவர்களுடைய திறமை வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இலக்கியம் ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய திறமைக்கான விருதுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வருமானத்தை உயர்த்துவதற்கான புதிய வழிகள் அறிந்து கொள்வீர்கள். வாழ்க்கையில் இனிமையும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிலையும் காணப்படும்.

பிறர் விமர்சனங்களைக் கடந்து மன அமைதியுடன் வாழ பகவத் கீதை சொல்லும் ரகசியம்

பிறர் விமர்சனங்களைக் கடந்து மன அமைதியுடன் வாழ பகவத் கீதை சொல்லும் ரகசியம்

 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு ராசி அதிபதியே சுக்கிரன் ஆகிறார். இவர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் கவர்ச்சி, அழகு மற்றும் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய காலகட்டம். வேலை செய்யக்கூடிய இடங்களில் இவர்களுடைய ஆளுமை வெளிப்படும்.

மற்றவர்களுடன் பழகும் விதம் மாறுபடும் மேலும் பக்குவப்பட்டு சிறப்பானதாக இருக்கும். இவர்களுடைய பேச்சுத் திறனால் கடினமான நிலையும் சமாளிக்க கூடிய விதத்தில் அமையும். இருப்பினும் பொருளாதாரச் சார்ந்த விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.   

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US